தொழில் நுட்பத்துடன் முன்னேறுகின்ற
பயணத்தில்எமதுபெருமைமிகு
கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டியது
அவசியமாகும்
INFOV
– 2015 கண்காட்சியில் ஜனாதிபதி
தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் எவ்வளவுதான் முன்னேறினாலும் நன்மை, கருணை, மனிதாபிமானம் என்பவை சீர்குலைந்துள்ள சமூகத்தில் அந்த முன்னேற்றத்தினால் எவ்வித பயனையூம் பெறமுடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் சமூகம் நல்லொழுக்கம் பணிவு மனிதாபிமானம் என்பவற்றில் எந்தவொரு நாட்டுக்கும் இரண்டாவதாக இல்லை. நாம் தொழில் நுட்பத்துடன் முன்னேறுகின்ற பயணத்தில் எப்பொழுதும் எமது பெருமைமிகு கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு எம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
கொழும்பு விசாகா வித்தியாலையமும் கல்வியமைச்சின் தகவல் தொடர்பாடல் கிளையும் இணைந்து ஏற்பாடு செய்த INFOV 2015 கண்காட்சியை நேற்று 03 ஆம் திகதி முற்பகல் கொழும்புக் கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் திறந்து வைத்தபோது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய சமூகம் தொழில்நுட்பத்தில் இந்தளவுக்கு முன்னேறுகின்போது அதிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது ஆனால் எந்தவொரு விடயத்திலும் இருபக்கங்கள் இருக்கின்றன என்ற மரபைப் புரிந்துகொண்டு அந்த நவீன மயத்தை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
INFOV 2015 என்பது விசாகா வித்தியாலத்தின் மூலம் 2வது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பாரிய தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியாகும்.
அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஸ, ஜயந்த கருணாதிலக, மற்றும் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோருடன் விசாகா வித்தியாலய அதிபர் திருமதி சந்தமாலி அவிருபப்பொல, விசாகா வித்தியாலய ஆசியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment