எம்.எல்.ஏ.,வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா
இன்று பதவியேற்பு

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்..,வாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார் என அறிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி எவ்வித ஆடம்பரமும், பெரிய அளவில் அறிவிப்புகளும் இல்லாமல், மிக எளிமையாக நடைபெற்றது எனவும் கூறப்படுகின்றது.
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சட்டப் பேரவை சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா, தற்போது 6வது முறையாக சட்டசபை உறுப்பினராகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top