மதினாவில் புதிதாக இளவரசர் முஹம்மது பின் அப்துல் அஜீஸ்

சர்வதேச விமான நிலையம் திறந்து வைப்பு

உலகம் முழுவதும் இருந்து வரும் இலட்சக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் வசதிக்காக வூதி அரேபியா நாட்டில் உள்ள மதினா நகரில் புதிதாக விமான நிலையம்  ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  பிறந்த ஊரான மக்கா, மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.
இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதுவரை மதினா நகரில் விமான நிலையம் இல்லாத குறையை போக்க புதிய விமான நிலையத்தை கட்டவும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தும் வூதி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதையடுத்து, விறுவிறுவென கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த மதினா சர்வதேச விமான நிலையத்தை வூதி மன்னர் சல்மான் திறந்து வைத்தார்.
சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு இளவரசர் முஹம்மது பின் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
40 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 6 முனையங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 36 லிப்ட்கள், 28 நகரும் படிக்கட்டுகள் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் பயணிகள் பயனடையும் வகையில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த விமான நிலைய வளாகத்தில் மேலும் இரண்டு இணைப்பு பகுதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் ஆண்டுதோறும் சுமார் 4 கோடி பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வூதி அரேபியாவில் ஏற்கனவே 27 விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top