முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு
முன்கூட்டியே சம்பளம்
வழங்க நடவடிக்கை எடுக்கவும்
-
இலங்கை இஸ்லாமிய
ஆசிரியர் சங்கம் கோரிக்கை
முஸ்லிம்
அரசாங்க
ஊழியர்கள்
நோன்புப் பெருநாளை
சிறப்பாகக்
கொண்டாடுவதற்கு வசதியாக அரசு, இம்மாதச் சம்பளத்தை
முன்கூட்டி
வழங்க முன்வர வேண்டும்
என இலங்கை
இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்
கோரிக்கை விடுத்துள்ளது.
இது
தொடர்பாக
அச்சங்கம்
விடுத்துள்ள
ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஆண்டு
தோறும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் தமிழ்
மற்றும் சிங்களச் சகோதரர்களின்
வசதி கருதி,
அந்த இனத்தைச்
சேர்ந்த ஊழியர்களுக்கு ஏப்ரல்
மாதச் சம்பளம் முன்கூட்டி வழங்கப்பட்டு
வருகின்றது. அவ்வாறே, முஸ்லிம்கள் இம்முறை, ரமழான் மாதப்பிறை 29 இல் முடிவுற்றால் 18ஆம்
திகதியும், அல்லது 30இல்
முடிவுற்றால்
19 ஆம்
திகதியும்
நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.
அதற்கு
வசதியாக, முஸ்லிம்
அரசாங்க
ஊழியர்கள்
நோன்புப் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில்,
இம்மாதச்
சம்பளத்தை முன்கூட்டி வழங்க
அரசு முன்வரல் வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
0 comments:
Post a Comment