கல்முனை, பொத்துவில்
தொகுதிகளில்
புதியவர்களையே வேட்பாளர்களாகக் களமிறக்க வேண்டும்
முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரிடம் அடிமட்ட போராளிகள் கோரிக்கை
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய தொகுதிகளில்
மக்களின் விருப்பத்திற்கு
ஏற்ப மக்களுக்கு
முழு நேரமும்
சேவை செய்யக்கூடிய
சுறுசுறுப்பானவர்களாகவும், கல்வித்திறன், சமார்த்தியம்,
நாகரிகம் ஆளுமை
கொண்ட புதியவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை
நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம்
பிரதேசங்களில்
விநியோகிக்கப்பட்டுள்ள
துண்டுப்பிரசுரமொன்றில் இக்கோரிக்கை
வலியுறுத்தப்பட்டுள்ளதுடன்
பதவியின்
அதிகாரத்தினை
மக்களுக்காகப்
பயன்படுத்தத் தவறியவர்களை
ஓரங்கட்ட
வேண்டுமென்றும் அதில்
கோரப்பட்டுள்ளது.
“முஸ்லிம் காங்ரஸ்
தலைமைத்துவத்திற்கோர்
அன்பான வேண்டுகோள்”
எனும் தலைப்பில்
“முஸ்லிம் காங்கிரஸை நேசிக்கும் அஷ்ரப்
அபிமானிகள்” எனும்
பெயரில் இந்த
துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
இத்
துண்டுப்பிரசுரத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் பொதுத்
தேர்தலில்
சவால் மிக்கதொரு தேர்தல் களமாக அம்பாறை மாவட்டம் அமையும்
என்பதில்
எவ்வித
சந்தேகமும் இல்லை.
யாரை களமிறக்கினால் வாக்காளர்களைக் கவரலாம்? அதிகூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கலாம் என்பதில் கட்சிகளுக்கிடையில் பெரும்
பரபரப்பு நிலை
காணப்படுகின்றது. குறிப்பாக, முஸ்லிம்கள் மத்தியில் அதிகூடிய செல்வாக்கு
மிக்க கட்சியான காங்கிரஸிலும்
இந்நிலை
மேலோங்கியுள்ளது.
முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்; ஒரு
கொடியின் கீழ்
இணைக்கப்பட வேண்டும்;
அதன் மூலம்
ஒரு அரசியல் பலம்
இச் சமூகத்தில் நிலை
நிறுத்தப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு
மறைந்த தலைவர்
அஷ்ரப் இக்கட்சியை
ஸ்தாபித்து வெற்றி கண்ட வரலாற்றை
மீளவும் மீட்டிப்
பார்க்க வேண்டிய தேவை
இல்லை.
இருப்பினும், தலைவர்
அஷ்ரப்பின்
மரணத்தின்
பின் முஸ்லிம்
காங்கிரஸை நம்பி
வாக்களித்த மக்கள்
அக்கட்சியின் மக்கள்
பிரதிநிதிகளால் பல்வேறு விடயங்களில்
ஏமாற்றப்பட்டமை,
அவர்களின்
வினைத் திறனற்ற செயற்பாடுகள் என்பன முஸ்லிம்
காங்கிரஸினை பலவீனப்படுத்தும் வகையில்
அமைந்துள்ளன.
அண்மைக்
காலங்களில்
தொடர்ச்சியாகத் தெரிவுசெய்யப்பட்ட
பாராளுமன்ற உறுப்பினர்கள்
வாக்களித்த மக்களுக்கு
ஒன்றுமே
செய்யமுடியாத
கையாலாகாத நிலையில்
தங்களது பதவிகளை மாத்திரம்
அலங்கரித்துக்கொண்டு செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதை இப்பிரதேசங்களிலுள்ள பாதைகளையும் பாடசாலைகளையும் அவதானிக்கும் போது
காணமுடிகின்றது.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றுமொரு பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது. இத்தேர்தலில் பலரும் களத்தில் குதிக்கவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக எவர்களை தலைவர் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்குவார் என்று அடிமட்டப் போராளிகள் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர். இத் தேர்தலில் புதியவர்களை வேட்பாளர்களாகக் களமிறக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடிமட்ட போராளிகளின் விருப்பமாகும்.
குறிப்பிட்ட நபர்களுக்குத்
தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம்
வழங்கி அவர்கள்
வெற்றிபெற்ற பின் மக்களின் தேவைகளை அறிந்து
செயற்பட
தவறுவதனால்
மக்கள் அவர்கள்
மீது வெறுப்புக்கொண்டுள்ளதோடு
அவர்கள் மீதான
நம்பிக்கையையும் இழந்துள்ளனர்.
இந்த நிலைமையினை
அம்பாறை
மாவட்டத்தில்
காணக்கூடியதாக உள்ளது என்பதை தலைமைத்துவத்திற்கு
சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
தமது
பதவியின்
அதிகாரத்தினை
எவ்வாறு
பயன்படுத்த முடியும்
என்று விளங்கிக்கொள்ள
முடியாத
மக்களிடையே
செல்வாக்கிழந்த,
மக்களது விமர்சனத்துக்கு ஆழாகியுள்ளவர்களை மீண்டும்
வேட்பாளர்களாக 2015 பொதுத்
தேர்தலின்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்,
குறிப்பாக
பொத்துவில்
மற்றும் கல்முனை தொகுதிகளின்
களமிறக்குவாராயின் இவ்விரு தொகுதிகளின்
பிரதிநிதித்துவத்தை நிச்சயம் முஸ்லிம்
காங்கிரஸ்
இழக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும்
இல்லை.
மக்களுடன்
முகம் பார்த்து
பேசமுடியாத,
எதையும் சிந்தித்துச் செயற்பட முடியாத, முற்போக்கு சிந்தனையற்ற, தமது
பதவியின்
அதிகாரத்தினை
மக்களுக்காக
பயன்படுத்தத் தவறியவர்களை
தவிர்த்து, அவர்களை ஓரங்கட்டிவிட்டு
மக்களுடன் மக்களாக செயற்பட்டு,
எம்மொழியிலும்
உரியவர்களுடன் பேசி,
மக்களின் பிரச்சினைகளை
சாணக்கியமான முறையில் தீர்த்துவைக்கக் கூடிய, சமூகப்
பொறுப்பும் சிந்தனையும் மிக்க ஆளுமை கொண்ட
புதியவர்களை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், கல்முனை
மற்றும் சம்மாந்துறை
தொகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக களமிறக்கி
பிரதிநிதித்துவங்களைக் காப்பாற்ற முஸ்லிம்
காங்கிரஸ் தலைமைத்துவம்
நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதை
மிகவும் தாழ்மையுடனும்
பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.” என
அத் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment