ஆப்கானிஸ்தான் முதல் பெண் நீதிபதி நியமன தீர்மானம் பாராளுமன்றத்தில் பெண் எம்பிக்களால்  தோல்வி 

ஆப்கானிஸ்தான் முதல் பெண் நீதிபதி நியமன தீர்மானத்தை பாராளுமன்றம்  நிராகரித்து விட்டது. அனிசா ரசூலியை  சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிப்பது தொடர்பான தீர்மானம் ஆப்கானிஸ்தான் பாரளுமன்ற கீழ் சபையில் ஓட்டெடுப்புக்கு விடபட்டது.  ரசூலிக்கு ஆதரவாக 88 ஓட்டுகள் விழுந்தன  அவருக்கு எதிராக 97 ஓட்டுகள் விழுந்தன இதனால் 9 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரது நியமனம் தோல்வி அடைந்தது.
ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் பெண் நீதிபதியை நியமித்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி  ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்..
சிறுவர் நீதிமன்ற நீதிபதியாகவும், பெண் நீதிபதிகள் சங்க தலைவராகவும் உள்ள அனிசா ரசூலியை , ஒன்பது பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதியாக கனி நியமித்திருந்தார். இம்மாத தொடக்கத்தில் அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிபரின் உத்தரவு தாமதமாக நேரிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக அனிசாவை நியமித்துள்ளதாக அறிவித்த அதிபர் அஷ்ரப் கனி, “நாட்டில் முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பெண் நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதன் மூலம் நீதித்துறையின் அமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று கூறினார்.
ஆப்கான் அரசியலைப்பு சட்டப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் ஒருவர், 10 ஆண்டுகள் அப்பதவியில் நீடிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம்  இந்த நியமனத்தை நிராகரித்து விட்டது. அனிசா ரசூலியை  சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிப்பது தொடர்பான தீர்மானம் ஆப்கானிஸ்தான் பாரளுமன்ற கீழ் சபையில் ஓட்டெடுப்புக்கு விடபட்டது.  9 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரது நியமனம் தோல்வி அடைந்தது.
இது ரசூலிக்கும் மட்டும் அதிர்ச்சியை கொடுக்கவில்லை  நாடுமுழுவதும் இதை எதிர்பார்த்தனர் இஸ்லாமிய கட்டுபாடுகள் அதிகம் உள்ள ஒரு நாட்டின் நீதிமன்றத்தின் உயர் பதவியில் ஒரு பெண் நியமிக்கபடுவதை உலகம் முழுவது எதிர்பார்த்திருந்தனர்.
நான் நிராகரிக்கபட்டது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை. என் பிரசாரத்தின் போது ஆதரவு இருந்தது.பாராளுமன்றத்தில் இவ்வாறு நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.என மெயில் மூலம் ஒரு ஆங்கில இணையதளத்திற்கு ரசூலி கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 67  பெண் எம்.பிக்கள் உள்ளனர். இந்த ஓட்டெடுப்பின் போது 21 பெண் எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top