மொட்டு தலைமையகத்தில் மஹிந்த, கோட்டா,பசில்
ஆரம்பமாகியது அரசியல் பிரவேசம்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமை காரியாலயத்திற்கு இன்று முதல்முறையாகச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ஸவின் இந்த பயணத்தில் மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தங்களுடைய கட்சி காரியாலயத்திற்கு வருகை தருமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அண்மையில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பொன்றை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் இன்று (04) காலை 11 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஸ குறித்த கட்சி தலைமை காரியாலயத்திற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 21 மாகாண சபை உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸமுன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ ஆகியோர் சிறிலங்கா பொதுஜன முன்னணிக் கட்சிக் காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.

.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top