மாணவன் போலி என்கவுன்டர் வழக்கில் 18 பொலிஸார் குற்றவாளி: 

இந்திய சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

உத்தரகண்டில் எம்பிஏ மாணவன் போலி என்கவுன்டர் வழக்கில் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18 பொலிஸாரும் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
.உத்தரகண்ட் மாநிலத்தில் 22 வயதான ரன்பீர் சிங் என்ற எம்பிஏ மாண வன், பொலிஸாரின் போலி என்கவுன்டரில் 2009 ஆம் ஆண்டு ஜூலை 3ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுன்டரில் ஈடுபட்ட பொலிஸார் மீது டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி மாலிக் அளித்த தீர்ப்பில், ‘போலி என்கவுன்டரில் ஈடுபட்ட 6 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 18 பொலிஸாரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். மேலும், ‘குற்றவாளிகளில் சந்தோஷ் குமு£ர் ஜெய்ஸ் வால், கோபால் துத் பட், ராஜேஷ் பிசத், நீரஜ் குமார், நிதின் சவுகான், நந்தர் மோகன் சிங் ராவத் ஆகிய 6 சப்இன்ஸ்பெக்டர்களும், அஜித் சிங் என்ற கான்ஸ்டபிளும் கொலை குற்றத்தை செய்து உள்ளனர் என்பது உறுதியாகிறது. மீதமுள்ள பொலிஸார் அனைவரும் ஆட்கடத்தல், கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். எனவே, இவர்கள் 18 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top