கிளர்ச்சியில்
ஈடுப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட
183 பேருக்கு
தூக்கு தண்டனை
உறுதிப்படுத்தியது
எகிப்து நீதிமன்றம்
எகிப்தில் முஸ்லிம்
சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த முகம்மது மோசி
பதவியிறக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுப்பட்டதாக
குற்றம்சாட்டப்பட்ட 183 பேருக்கு விதிக்கப்பட்ட
தூக்கு தண்டனையை
அந்நாட்டு நீதிமன்றம்
உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு
ஜூலை மாதம்
அதிபர் முகம்மது
மோசி பதவியிறக்கம்
செய்யப்பட்டார்.
இதனை
எதிர்த்து அவரது
ஆதரவாளர்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுப்பட்டனர். அவர்கள்
மீது இராணுவம்
நடத்திய தாக்குதலில்
100க்கும் மேற்ப்பட்டோர்
கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் பலர் மீது தேசத்
துரோகம் உள்ளிட்ட
பல்வேறு பிரிவுகளின்
கீழ் வழக்கு
தொடரப்பட்டு விசாரணையின் முடிவில் மோசியின் ஆதரவாளர்கள்
529 பேருக்கு மார்ச் மாதம் மரண தண்டனை
விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்
காவல் நிலையம்
மீது நடத்தப்பட்ட
தாக்குதல் தொடர்பான
வழக்கில் முஸ்லிம்
சகோதரதுவ அமைப்பின்
தலைவர் முகம்மது
பேடி உள்ளிட்ட
689 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை எதிர்த்து நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில்
இவ்வழக்கில் இறுதி தீர்ப்பளித்த நீதிமன்றம் முகம்மது
பேடி உள்ளிட்ட
183 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி
செய்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த குற்றம்
சாட்டப்பட்டோர்களின் உறவினர்கள் தீர்ப்பை
கேட்டு கதறி
அழுதனர். இந்த
தீர்ப்பு அவசர
நிலையில் வழங்கப்பட்டது
என்று மனித
உரிமை அமைப்புகளும்
கண்டனம் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment