அடிப்படைவாத அமைப்புகள் நாட்டை அழிக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை 

அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச





அடிப்படைவாத அமைப்புகள் நாட்டை அழிக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். எந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும் பேதமின்றி சகலரையும் சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். முப்பது வருடங்களாக நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதத்தை தோற்கடித்த அரசாங்கம் நாட்டில் ஆட்சியில் உள்ளது. இதனால் தற்போது நாட்டில் செயற்பட்டு வரும் அடிப்படைவாத பயங்கரவாதத்தை அழித்தொழிக்கவும் அவற்றுடன் தொடர்புடையவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் என்ற வகையில் இது நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமை. அதனை செய்ய தவறினால் நாடு எரிமலையாக மாறிவிடும். நாட்டில் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாக இடமளிக்கக் கூடாது. நாட்டை வலுவானதாக்கி, இன, குல, மத பேதங்களை புறக்கணிக்கும், சகலருமு் சகோதரத்துவமாக வாழும் நாடு இலங்கை என்பதை உலகத்திற்கு காண்பிக்க வேண்டும். நாட்டில் வாழும் சகல அடிப்படைவாதிகளும் நாட்டிக்கு துரோகம் செய்து வருகின்றனர். இது நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய பயங்கரவாதமாகும். இதனால் இந்த பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top