அரசியலுக்கு
அப்பால் சமூகத்தின் பாதுகாப்பிற்காக
ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள்
அழைப்பு விடுக்கின்றார் ஐ.தே.க.கல்முனை பிரசாரச்
செயலாளர்
தம்புள்ளை
தொடக்கம் தர்கா
நகர், பாணந்துறை
வரை முஸ்லிம்கள்
மீது பேரினவாதிகளின்
கொலைவெறித் தாக்குதல் தொடர்கின்ற போதிலும் அவற்றைத்
தடுப்பதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகள் எதனையும்
மேற்கொள்ளாதிருப்பதன் மூலம் இத்தாக்குதல்கள்
அரசாங்க ஆசிர்வாதத்துடன்தான்
முன்னெடுக்கப்படுகிறது என்பதை புரிந்து
கொள்ள முடிகிறது.
இவ்வாறு
ஐக்கிய தேசியக்
கட்சியின் கல்முனைத்
தொகுதி பிரசாரச்
செயலாளரும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவருமான
செயிட் அஸ்வான்
சக்காப் மௌலானா
தெரிவித்துள்ளார்.
இது
குறித்து அவர்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
"பேரின வெறிபிடித்த சக்திகள் இலங்கை
வாழ் முஸ்லிம்களை
கூண்டோடு அழிக்கும்
முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் அனைத்து
இன மக்களுக்கும்
பொதுவான நாட்டின்
ஜனாதிபதியும் அரசாங்கமும் இது விடயத்தில் தமது
பொறுப்பை உணர்ந்து
கொள்ளாமல் பேரின
சக்திகளுக்கு சார்பாகவே நடந்து கொள்கின்றன.
கடந்த
இரு வருடங்களுக்கு
முன்னர் தம்புள்ளை
பள்ளிவாசலில் தொடங்கிய பேரின வெறியாட்டம் தற்போது
அளுத்கம, தர்கா
நகர், வெலிப்பன,
பாணந்துறை என்று பரந்து விரிந்து
செல்கின்றது. இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள்
தாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில
பள்ளிசாசல்கள் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. பல பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.
தற்போது
தர்கா நகர்,
வெலிப்பன உள்ளிட்ட
பகுதிகளிலும் அம்பாந்தோட்டை, குருநாகல், கண்டி, அனுராதபுரம்
போன்ற மாவட்டங்களிலும்
பத்துக்கு மேற்பட்ட
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும்
உள்ளன.
தர்கா
நகரில் மூன்று
முஸ்லிம் உயிர்கள்
பேரின வெறியர்களினால்
காவு கொள்ளப்பட்டுள்ளன.
அந்த நகரம்
முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான, கடைகள், வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
இன்று பாணந்துறையில்
நோலிமிட் மீது
குண்டுத் தாக்குதல்
நடத்தப்பட்டு- முற்றாக எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு
அட்டூழியங்கள் மேற்கொள்ளப்பட்டும் கூட அதன் சூத்திரதாரி
ஞான சார
தேரர் கைது
செய்யப்படவில்லை என்றால் நாட்டின் சட்டம் யார்
கையில் உள்ளது
என்ற கேள்வி
எழுகிறது. உள்நாட்டிலும்
சர்வதேசத்திலும் எழுந்துள்ள அழுத்தங்கள் காரணமாக பலர்
கைது செய்யப்பட்டிருப்பதாக
கூறப்படுகிறது. ஆனால் பொது பல சேனா
முக்கியஸ்தர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
இதன்
மூலம் தெட்டத்
தெளிவாக ஒரு
உண்மையை புரிந்து
கொள்ள முடிகிறது.
அதாவது பொது
பல சேனாவை
அரசாங்கமே போஷித்து
வருகிறது என்று
இவ்வளவு காலமும்
கூறப்பட்டு வந்த விடயம் இன்று எந்த
சந்தேகமும் இன்றி நிரூபணமாகி இருக்கிறது.
இந்நிலையில்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் தலைமைகள்
எதுவும் செய்ய
முடியாமல் தடுமாறித்
திணறுகின்றனர். அவர்களது கோரிக்கைகள் எதுவும் அரசாங்கத்தினால்
கண்டு கொள்ளப்படவில்லை.
இந்த முஸ்லிம்
அமைச்சர்களை விட தனக்கு பொது பல
சேனாவே முக்கியம்
என்ற நிலைப்பாட்டில்
ஜனாதிபதி இருக்கிறார்,.
அவ்வாறாயின்
இந்த முஸ்லிம்
தலைமைகள் இன்னும்
ஏன் அரசில்
ஒட்டிக் கொண்டிருக்க
வேண்டும்? சமூக
நலன்களுக்காகவே அரசாங்கத்தில் இருக்கிறோம் என்று கூறி
வந்த முஸ்லிம்
அமைச்சர்கள் இன்னும் எந்த நலன்களுக்காக காத்திருக்கின்றனர்.
முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே அமைச்சர்களாக
நீடிக்கிறோம் என்று இவர்களால் இப்போது கூற
முடியுமா? இனியும்
இந்த அரசாங்கத்தில்
முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா? அதனை
எம்மால் அரசாங்கத்திடம்
செய்து கொள்ள
முடியும் என்று
முஸ்லிம் அமைச்சர்களால்
உத்தரவாதம் அளிக்க முடியுமா?
ஆகையினால்
இனியும் தாமதிக்காமல்
முஸ்லிம் தலைமைகள்
அனைத்தும் அரசாங்கத்தில்
இருந்து உடனடியாக
வெளியேறி எல்லோரும்
கட்சி அரசியலுக்கு
அப்பால் சமூகத்தின்
பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள்
என்று இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்"
என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment