ஈரானில் கடும் மழை
நிலச்சரிவில் சிக்கி 3 பெண்கள் பலி:
600 பேர் உயிருடன் மீட்பு
ஈரானின்
வடகிழக்கு பகுதிகளில்
புயல் காற்றுடன்
பலத்த மழை
பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு
பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 3 பெண்கள் பலியானார்கள்.
600 பேர் உயிருடன்
மீட்கப்பட்டனர் என வெள்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின்
வடகிழக்கே கோராசான்
மற்றும் கோலேஸ்தான்
பிராந்தியங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த
சூறை காற்றுடன்
மழை பெய்து
வருகிறது. இதனால்
பல்வேறு பகுதிகளில்
மழை வெள்ளம்
சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகள் மழை வெள்ளத்தில்
அடித்து செல்லப்பட்டன.
வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம்
கடும் நிலச்சரிவு
ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி
3 பெண்கள் பலியானார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரான் மீட்பு
குழுவினர் விரைந்து
வந்து மீட்பு
பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது 600 பேரை உயிருடன் மீட்டனர். மழை
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உட்பட
அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று
மீட்பு துறை
மேலாண்மை அதிகாரி
ஹோஜாத் அலி
ஷியான்பர் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவில் கோலேஸ்தான் பிராந்தியத்தில்
மட்டும் ரூ.2
ஆயிரம் கோடிக்கு
மேல் சேதம்
ஏற்பட்டு உள்ளதாக
கவர்னர் ஹசன்
சாதிக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment