பிரசவத்தின் போது மனைவி
இறப்பு;
பெண் டாக்டரை துப்பாக்கியால் சுட்டார் கணவர்
பிரசவத்தின்
போது மனைவி
இறந்தால் ஆத்திரம்
அடைந்த கணவர்
பிரசவம் பார்த்த
பெண் டாக்டரை
துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவம் இந்தியாவில்
உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச
மாநிலம் பாசல்பூர்
பகுதியை சேர்ந்தவர்
பாபுதீன்(வயது
32). இவரது கர்ப்பிணி மனைவி அங்குள்ள மருத்துவமனையில்
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குழந்தை
பிறந்துள்ளது. அப்போது அவர் இறந்துவிட்டார். இதனையடுத்து
பாபுதீன் கடும்
கோபம் அடைந்துள்ளார்.
பின்னர் இறந்த
பெண்ணின் உடல்
அவரது சொந்த
ஊருக்கு எடுத்து
செல்லப்பட்டுள்ளது. இதற்கிடையே டாக்டரின்
கவனக்குறைவு காரணமாகதான் தனது மனைவி இறந்துவிட்டார்
என்று கூறி
பாபுதீன் மருத்துவமனைக்கு
சென்று அங்கிருந்த
டாக்டர் முனேஷ்
தோமரை சுட்டுவிட்டார்.
விட்டில் இருந்த
நாட்டு துப்பாக்கியை
எடுத்து சென்று
முனேஷ் தோமரை
சுட்டுள்ளார்.
உடனடியாக
அங்கிருந்த ஊழியர்கள் முனேஷை பிடித்து அடித்து
உதைத்தனர். இதில் அவரும் படுகாயம் அடைந்தார்.
சுடப்பட்ட டாக்டருக்கு
உடனடியாக மருத்துவமனையில்
சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாபுதீன் மற்றொரு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருவரும் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று
வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக
பொலிஸார் வழக்கு
பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment