நைஜீரியாவில் 500 பேர் பலி?
தீவிரவாதிகள் பயங்கர
தாக்குதல்!
நைஜீரியாவின்
வடகிழக்கில் உள்ள 4 கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள்
பயங்கர தாக்குதல்
நடத்தினர். இதில் 500 பேர் வரை பலியாகி
இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நைஜீரியாவில்
மேற்கத்திய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து
போகோஹரம் தீவிரவாதிகள்
பயங்கர தாக்குதல்களை
நடத்தி வருகின்றனர்.
,வடக்கு
கிழக்கு பகுதியில்
உள்ள 4 கிராமங்களுக்குள்
நேற்று திடீரென
புகுந்த தீவிரவாதிகள்
சரமாரி துப்பாக்கி
சூட்டில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சுட்டு தள்ளினர்.
மேலும் வீடுகளுக்கும்
கடைகளுக்கும் தீ வைத்தனர். இந்த கிராமங்கள்
முழுவதும் ஆங்காங்கே
சடலங்கள் குவியல்
குவியலாக கிடப்பதாக
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல்தொடர்பு
பரிமாற்றம் சரியான முறையில் இல்லாததால் உயிரிழந்தோர்
எண்ணிக்கை உறுதியாக
தெரியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும்
500 பேர் வரை
பலியாகி இருக்கலாம்
என அஞ்சப்படுகிறது.நைஜீரியாவில் கடந்த
சில தினங்களுக்கு
முன்பு 200க்கும்
அதிகமான பள்ளி
சிறுமிகளை போகோ
ஹரம் தீவிரவாதிகள்
பணய கைதிகளாகப்
பிடித்து சென்றனர்.
அங்கு தீவிரவாதிகளின்
நடமாட்டத்தை ஒடுக்கும் பணிகளில் அமெரிக்கா உள்ளிட்ட
நாடுகளுடன் நைஜீரிய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இதை தடுக்கும்
விதமாக இந்த
பயங்கர தாக்குதலில்
தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment