பாகிஸ்தானில் இளம் பெண் சுடப்பட்டு கால்வாயில்
வீச்சு!
மீண்டும்
கெளரவ கொலை முயற்சி!!
பஞ்சாப்
மாகாணம் ஹாபிசாபாத்தை சேர்ந்தவர் சபா மசூத் (வயது 18) இவர் நீண்ட நாட்களாக காதலித்து
வந்த முகமது கொய்சர் என்பவரை கடந்த 5 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த
திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாவின் பெற்றோர்கள். சபாவை ஹாபிசாபாத்திற்கு கொண்டு
சென்றனர்.அங்கு சபாவை தாய்-தந்தை மற்றும் உறவினர்கள்
தாக்கினார்கள். பின்னர் அவரை துப்பாக்கியால் 2 முறை சுட்டனர்.பின்னர் சபா இறந்து விட்டதாக
கருதி அவரை ஒரு சாக்கு பையில் போட்டு கால்வாயில் எறிந்து விட்டனர்
சபா
மசூதுக்கு வலது கைமற்றும் கன்னத்தில் படுகாயம்
ஏற்பட்டு உள்ளது. நீரில் சாக்கு பை மூழ்கியதும் சபா மயக்கம் தெளிந்து உள்ளார். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் மருத்துவமனையில்
சேர்ந்து உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தை
தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
பொலிஸார்
அவரது வாக்குமூலத்தை பெற்று உள்ளனர் அதில் அவர் தனது குடும்பத்தை குற்றம்சாட்டி உள்ளார்.எனது
தந்தை மசூத் அகமது என்னை சித்திரவதை செய்து சுட்டார். சகோதரர் பைசல் மசூத், மாமா ஆஷிக்
அகமது மற்றும் அவரது மனைவி சாஜிதா பிபி ஆகியோரும் ஆகியோரும் கொடுமை படுத்தி உள்ளனர்
என கூறி உள்ளார்.
இது
குறித்து உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது
2013 இல் மட்டும் இது போல் 869 வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளது. பெரும்பாலான
வழக்குகள் பதிவு செய்யபடுவது இல்லை.என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில்
காதலித்து திருமணம் செய்து கொள்ளும்
பெண்களை பெற்றோர்களே
கெளரவம் கருதி
கொலை செய்யும்
சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றது.
சமீபத்தில்
லாகூர் அருகே
நானா கானா
சாகிப்பை சேர்ந்தவர்
பர்சானா பர்வீன்
(வயது 25). இவர் தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, சில மாதங்களுக்கு
முன்பு, முகமது
இக்பால் என்ற
45 வயது நபரை
திருமணம் செய்து
கொண்டார். ஆனால்,அவரை இக்பால்
கடத்திச் சென்று,
வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டதாக பர்சானாவின்
பெற்றோர், பொலிஸில்
புகார் செய்தனர்.
இந்நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்த பர்சானா, தன் கணவர் இக்பாலுடன் லாகூர் ஐகோர்ட்டுக்கு சென்றார். கணவருக்கு ஆதரவாக அவர் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தார்.
பிறகு வெளியே வந்த அவரை அவருடைய தந்தை முகமது அஜீமும், சகோதரர்களும் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்ல முயன்றனர். அதற்காக அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அம்முயற்சி வெற்றி பெறாததால், கம்புகளாலும், கற்களாலும் பர்சானாவையும், இக்பாலையும் தாக்கினர். இதில், பர்சானா சம்பவ இடத்திலேயே பலியானார்.
0 comments:
Post a Comment