உலக கோப்பை போட்டியில்
விளையாடும்
பணக்கார வீரர்
*
உலக கோப்பையில் விளையாடும் பணக்கார வீரர் என்ற பெருமையை போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1,400 கோடி.
* கடைசியாக 1950ல் உலக கோப்பை கால்பந்து தொடரை பிரேசில் நடத்தியது. அப்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரேசில் அணி, உருகுவேயை எதிர்த்து விளையாடியது. ஆட்டம் முடிய கடைசி 11 நிமிடங்களே இருந்த நிலையில் உருகுவே 2வது கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆட்ட நேரம் முடியும் வரை மைதானத்தில் மயான அமைதி நிலவியது. இறுதியில் உருகுவே 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
* கொல்கத்தாவை சேர்ந்த பன்னாலால் சட்டர்ஜி (81), அவரது மனைவி சைதாலி சட்டர்ஜி (72) தம்பதியினர் 1982ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை நேரில் சென்று பார்க்கிறார்களாம். ஸ்பெயினில் நடந்த தொடரில் தொடங்கி தற்போது 9வது முறையாக பிரேசிலில் நடக்கும் பைனலையும் பார்க்கவுள்ளனர். இதற்காக மாதம் ஒரு தொகையை சேர்த்து வைப்பதாகவும், இன்னும் பல ஆண்டுகள் ஜோடியாக போட்டியை பார்க்க வேண்டுமென தங்கள் லட்சியமாகவும் இந்த கால்பந்து தம்பதியினர் கூறியிருக்கிறார்கள்.
* உலக கோப்பையை பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை வென்று முன்னிலை வகிக்கிறது (1958, 1962, 1970, 1994, 2002).
* இத்தாலி அணி 4 முறையும் (1934, 1938, 1982,
2006), மேற்கு ஜெர்மனி 3 முறையும் (1954, 1974, 1990) வென்று 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன.
* அர்ஜென்டினா (1978, 1986), உருகுவே (1930, 1950) அணிகள் தலா 2 முறை, பிரான்ஸ் (1998), இங்கிலாந்து (1966), ஸ்பெயின் (2010) தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன.
* மெக்சிகோவின் அன்டோனியோ கார்பஜால், ஜெர்மனி வீரர் லொதார் மத்தாயுஸ் இருவரும் அதிகட்சமாக 5
உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளனர்.
* லொதார் மத்தாயுஸ் 25 ஆட்டங்களில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
* அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரேசிலின் ரொனால்டோ 15 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
* ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ், ஜெர்ட் முல்லர் தலா 14 கோல் அடித்து 2வது இடத்தில் உள்ளனர்.
* ஜெர்மனி அணி அதிகபட்சமாக 99 ஆட்டங்களில் விளையாடி உள்ளது.
* பிரேசில் அணி அதிகபட்சமாக 210 கோல் அடித்து முதலிடம் வகிக்கிறது.
* இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் ஹால்லட் (44) என்பவர் உலக கோப்பையில் இங்கிலாந்தின் ஆட்டத்தை பார்ப்பதற்காக தனது நாட்டிலிருந்து பிரேசிலுக்கு ஸ்கூட்டரிலேயே வந்திருக்கிறார். 24,000 கி.மீட்டரை 4 மாதமாக ஸ்கூட்டரில் பயணித்து பிரேசில் வந்திருக்கிறார். வித்தியாசத்தை காட்டுவதற்காக இவ்வாறு வந்ததாக கூறும் கிறிஸ், இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
* இந்தாண்டு உலக கோப்பையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. கோல் அடிக்கப்பட்டதா இல்லையா என்ற சர்ச்சைக்கு தீர்வு காண, கோல் லைன் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கோல் போஸ்டை சுற்றில் 14 அதிவேக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவி, கோல் அடிக்கப்பட்டதா இல்லையா என்பதை உடனடியாக நடுவருக்கு அவரது கைக்கடிகாரம் மூலம் தகவல் அனுப்பி விடும். இதே போல, பிரேசுகா கால்பந்திலும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment