தீவிரவாதிகளுடன் பிரதமர்
மோடியின் படம்
கைதானவர்களிடம்
இந்தியப் பொலிஸார் தீவிர விசாரணை
இந்திய கேரள
மாநிலம் திருச்சூர்
மாவட்டம் குன்னம்குளத்தில்
உள்ள அரசு
பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா மலரில்
நல்ல முகங்கள்
என்ற தலைப்பில்
சில தலைவர்களின்
படங்களும், எதிர்மறை முகங்கள் என்ற தலைப்பில்
சிலரது படங்களும்
வெளியாகி இருந்தன.
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன், அமெரிக்க முன்னாள்
அதிபர் ஜார்ஜ்
புஷ், வீரப்பன்
ஆகியோர் படங்களும்
அந்த மலரில்
இருந்தன.
தீவிரவாதிகளான
அஜ்மல் கசாப்,
பின்லேடன் ஆகியோர்
படங்களுடன் பிரதமர் நரேந்திரமோடி படம் அந்த
மலரில் இடம்பெற்று
இருந்ததால் இது தொடர்பாக பாலிடெக்னிக் முதல்வர்
உள்பட 7 பேர்
கைது செய்யப்பட்டனர்.
கைதான 7 பேரிடமும்
இந்த விவகாரம்
தொடர்பாக பொலிஸார்
தீவிர விசாரணை
நடத்துகிறார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment