ஈராக்கில் இராணுவ வீரர்களை சிறைப்பிடித்தது தீவிரவாதப் படை
தலைநகர் பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள் முன்னேறுவதால்
பெரும் பதற்றம்
ஈராக்கின்
முக்கிய நகரங்களை
கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாத்தை நோக்கி
முன்னேறுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில்
அல் கொய்தா
ஆதரவு தீவிரவாதிகளுக்கும்,
அந்நாட்டு இராணுவத்திற்கும்
நடைபெற்று வரும்
உள்நாட்டு போர்
உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வடக்கு ஈராக்கில் முன்னாள்
அதிபர் சதாம்
ஹுஸைனின் சொந்த
ஊரான திக்ரித்
உட்பட 5க்கும்
மேற்பட்ட முக்கிய
நகரங்களை தீவிரவாதிகள்
கைப்பறியுள்ளனர். நாட்டின் தலைநகரான பாக்தாத்தை கைப்பற்றும்
திட்டத்துடன் தொடர்ந்து முன்னேறும் தீவிரவாதிகள் பாக்தாத்திலிருந்து
60 மைல் தூரத்திலுள்ள
உத்ஹைன் நகரை
தங்கள் வசமாக்கியுள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது.
வடக்கு
ஈராக்கிலிருந்த பல்வேறு இராணுவ முகாம்களையும் ஆக்ரமித்துள்ள
தீவிரவாத படையினர்,
ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் சிறைப்பிடித்துள்ளனர். இராணுவ வீரர்கள் கைதிகளாக பிடித்துச்
செல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தீவிரவாதிகள்
எந்த நேரத்திலும்
பாக்தாத் மீது
தாக்குதலை துவங்கலாம்
என்பதால் பதிலடி
கொடுக்க ஈராக்
இராணுவம் தயாராகி
வருகிறது. தீவிரவாதிகளின்
கை தொடர்ந்து
ஓங்கிவருவதால் ஈராக் இராணுவத்திற்கு ஆதரவாக அமெரிக்க
படைகள் களமிறங்கலாம்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈராக்கிற்கு
உதவுவதற்கான அனைத்து வழிகளையும் ஆய்வு செய்து
வருவதாக அமெரிக்க
அதிபர் ஒபாமா
தெரிவித்-துள்ளார்.
ஈராக் நிலரவம்
குறித்து ஐ.நா.
கவுன்சிலும் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தி
உள்ளது. அல்
கொய்தா ஆதரவு
தீவிரவாதிகள் சன்னி பிரிவைச் சேர்ந்த
இஸ்லாமியர்கள் என்பதால் பாக்தாத்தில் அதிக அளவு
வசிக்கும் ஷியா
பிரிவு இஸ்லாமியர்கள்
அவர்களுக்கு எதிராக களமிறங்குவார்கள் என தெரிகிறது.
கடந்த 2006,2007ம் ஆண்டுகளில் இரு பிரிவினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனால் மீண்டும் அது போன்ற மோதல் நடைபெற்று விடாமல் தடுக்க ஈராக் அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. தீவிரவாதிகள் வசமாகியுள்ள மோசோல் உள்ளிட்ட நகரங்களை மீட்க வான்வெளி தாக்குதல்களையும் ஈராக் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment