ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸவுக்கு 

அமைதி விருது

பொலிவியா அறிவிப்பு



எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ‘ஜி77’ நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றுகிறார். ஜனாதிபதிக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருதும் வழங்கப்படவுள்ளது.
‘ஜி77’ நாடுகளின் உச்சி மாநாடு 14 ,15ஆம்  திகதிகளில் தென் அமெரிக்காவில் உள்ள ஜி77’ சாண்டாக்ரூஸ் நகரில் நடக்க உள்ளது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்ஜி77 அமைப்பின் தற்போதைய தலைவரும், பொலிவியா நாட்டின் அதிபருமான இவோ மோரேல்ஸ், .நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், .நா. பொதுச் சபை தலைவர் ஜான் ஆஷ், சீன அரசின் பிரதிநிதிகள், ஆகியோரும் இதில கலந்து கொள்கின்றனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் உரையாற்றுகிறார். அவருக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருதும் வழங்கப்படவுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top