சீன தொழிற்சாலையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் நூடுல்ஸ்
அதிர்ச்சி படங்கள்
உலகமெங்கிலும்
மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் நூடுல்ஸ், நகர பகுதி முதல் கிராம பகுதிவரை
அனைத்து பகுதிகளிலும் இவ்வகை உணவுக்கு கடைகள் திறக்கப்படுகிறது. இந்த நூடூல்ஸ் சிறந்த
சுகாதாரமான இடங்களில் தயாராகிறது என்று நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தால் அது
மாபெரும் தவறு சீனாவில் நடந்த ஒரு சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.நூடுல்சின்
தாயகம் சீனாதான் என்பது குறிப்பிட தக்கது.
சீனாவில்
உள்ள டாங்செங் ரைஸ் நூடுல்ஸ் தொழிற்சாலையில் ஏராளமான நூடுல்ஸ் தயாராகி அவற்றை பேக்கிங் செய்வதற்காக ஒரு அறையில் குவித்து வைத்துள்ளனர். அந்த அறைக்கு செல்லும் அந்நிறுவன ஊழியர்கள் வெறுங்காலுடன் நூடுல்ஸ் மேல் மிதித்து செல்கின்றனர். ஒரு ஊழியர் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நூடுல்ஸ் மேல் படுத்து தூங்குகிறார். இவ்வாறு சுகாதாரமற்ற நூடுல்ஸ்தான் பாக்கெட்டில் விற்பனையாகிறது. அதை சாப்பிடும் நம் உடல் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை கொஞ்சம் நினைத்து பார்த்தால், இனிமேல் யாரும் நூடுல்ஸை கையால் தொடக்கூட மாட்டார்கள்.
இந்த நூடுல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குறைந்தது பத்து வருட ஜெயில் தண்டனை கிடைக்கும் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment