அமைச்சர்
அதாவுல்லாஹ்வுக்கு ஓர் பகிரங்க கடிதம் !
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
எனது
நண்பரும் அமைச்சருமான
கௌரவ அதாவுல்லாஹ்
அவர்களுக்கு,
நீங்கள்
என்னை உங்களுக்கு
இரண்டாவது கடிதம்
ஒன்றினை எழுத
வைத்தமையையிட்டு நான் வேதனைப்படுகிறேன். ஏனெனில் எனது
எழுத்துகள் சில வேளைகளில் உங்களுக்கு வலியைத்
தந்தால் என்னுடனான
தனிப்பட்ட நட்பினையும்
நீங்கள் துண்டித்து
விடுவீர்களோ என்ற அச்சம் எனக்குள் உள்ளது.
இருப்பினும்
நீங்கள் ஓர்
அரசியல்வாதிதானே! இதெல்லாம் எங்களுக்குச் சகஜம் என்ற
பாணியில் அப்படிச்
செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது.
அளுத்கமை
மற்றும் பேருவளை
பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த
நமது சமூகத்துக்கு
எதிரான இன
சங்காரத்தின் கொடூரங்களை நீங்களும் போய் பார்த்தீர்களோ
தெரியாது. என்னைப்
பொறுத்த வரையில்
நீங்கள் அந்தப்
பக்கம் போனதாகத்
தெரியவில்லை.
சில
வேளைகளில் அங்கெல்லாம்
போய் பார்க்கும்
அளவுக்கு உங்களுக்கு
நேரம் இருந்திருக்காது.
நீங்கள் படு
பிசியான அமைச்சர்
என்பது எனக்குத்
தெரியும். உங்களுடன்
தொடர்பு கொண்டு
பேச முயன்றாலும்
அது தோற்றே
போகிறது. நீங்கள்
ஊடகங்களுடன் இப்போதாவது தொடர்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் அடுத்த
வருடம் தேர்தல்.
நாங்களும் தேவைப்படலாம்.
சரி
இனி விடயத்துக்கு
வருவோம் “தமிழ்
பயங்கரவாதம் தமிழ் மக்களை அழித்து கோவில்களையும்
நாசப்படுத்தி முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும்
அழித்த வரலாற்றை
நாம் மறக்கவில்லை.
அதுபோல பெளத்த
விகாரைகளை உடைத்து
பிக்குமாரையும் கொலை செய்தது.” என்ற கருத்தினை
நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள்.
இன்றைய நிலையில்
இவ்வாறு நீங்கள்
கருத்துகளை வெளியிட எப்படித்தான் உங்களுக்கு மனம்
வந்ததோ தெரியாது.
இறைவன்
உங்கள் கல்புக்குள்
கருணையை வைக்கவில்லையா
அமைச்சர் அவர்களே?
அளுத்கமையும் பேருவளையும் பற்றி எரிந்ததற்கு மறை
பொருளாக பிறிதொரு
காரணத்தை நீங்கள்
கற்பிக்க முயற்சிக்கிறீர்களா?
“தமிழ்
பயங்கரவாதம் முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும்
அழித்த வரலாற்றை
நாம் மறக்கவில்லை.
அதுபோல பெளத்த
விகாரைகளை உடைத்து
பிக்குமாரையும் கொலை செய்தது.” என்று நீங்கள்
கூறுவதானது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்
போடும் கதையாக
உள்ளது.
அல்லது
தமிழ் பயங்கரவாதம்
முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் அழித்து பெளத்த விகாரைகளை
உடைத்து பிக்குமாரையும்
கொலை செய்தது
என்பதற்காக பௌத்த பயங்கரவாதமும் முஸ்லிம்களை அழித்து
பள்ளிவாசல்களையும் உடைப்பதில் தவறில்லை
என்று கூறவா
நீங்கள் வருகிறீர்கள்.
நிச்சயமாக
நீங்கள் ஒரு
முஸ்லிம் என்ற
காரணத்தால் அப்படிக் கூறியிருக்கமாட்டீர்கள்
என்று நான்
நினைக்கிறேன். உங்கள் வார்த்தைப் பிரயோகங்களில் தவறு
ஏற்பட்டிருக்கலாம். அல்லது தவறாகப்
புரியப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்படித்தானே?
இறுதியாக
தமிழர் தொடர்பில்
நீங்கள் மேலும்
மேலும் அதிருப்தியான
கருத்துகளை வெளியிட்டு எமது சமூகத்துக்குப் பாதிப்பை
ஏற்படுத்தி விடாதீர்கள். அளுத்கமை, பேருவளை சம்பவங்கள்
தொடர்பில் தமிழர்
அரசியல் தலைமைகள்
விடுத்த அறிக்கைகளை
நீங்கள் படிக்கவில்லையா?
எவ்வளவு ஆக்ரோஷமாக
கருத்துகளை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.
அம்பாறை
மாவட்ட முன்னாள்
எம்.பி
சந்திரநேரு அவர்கள் அளுத்கமை மற்றும் பேருவளை
ஆகிய பகுதிகளுக்குச்
சென்று பாதிக்கப்பட்ட
எமது மக்களைச்
சந்தித்து உதவிகள்
செய்துள்ளதனை நீங்கள் அறியவில்லையா? அவர் என்ன
அங்கு தேர்தலா
கேட்கப் போகிறார்
இல்லையே?
அளுத்கம,
பேருவளை சம்பவங்களைக்
கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும்
கண்டனப் பேரணிகளையும்
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த்
தேசிய முன்னணியும்
ஏற்பாடு செய்துள்ளன.
இதனை நீங்கள்
அறியவில்லையா?
இப்போதுள்ள
நிலையில் தமிழ்
பேசும் இரு
சமூகங்களுக்குமிடையில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும்
கட்டியெழுப்புவது உங்கள் போன்ற அரசியல்வாதிகள் செய்ய
வேண்டிய முக்கிய
பணியல்லவா?
தமிழக்கத்தில்
இடம்பெற்ற அளுத்கம,
பேருவளை சம்பவங்களுக்கான
எதிர்ப்புக் கூட்டத்தில் எம்மவர்களுடன் நின்று குரல்
கொடுத்தவர்களில் தமிழர்களும் அடங்குவர். தொல் திருமாவளவன்
அவர்கள் கூட
களத்தில் முன்னிலையில்
நின்றதனை நீங்கள்
அறியவில்லையா? அவர் என்ன இலங்கையில் எலக்க்ஷனா
கேட்கப் போகிறார்?
எவனே,
நீங்கள் வார்த்தைகளை
வெளியே விடும்
முன்னர் அதன்
தாக்கம் எவ்வாறு
அமையும் என்பதற்கான
ஒரு வெள்ளோட்டத்தைச்
செய்து கொள்ளுங்கள்
அமைச்சர் அவர்களே!
மேலும்
இப்போதுள்ள புண்ணுக்கு மருந்து கட்ட வேண்டியதே
உங்களது பொறுப்பு.
அதற்காக புண்ணுக்கு
மருந்து போடாமல்
அதன் மேல்
வெறும் பெண்டஜை
சுற்றிக் கட்டி
விட்டு மருந்து
போட்டு விட்டேன்
பாருங்கள் என்று
உலகுக்குக் காட்டுவது உருப்படாத விடயம் அமைச்சர்
அவர்களே!
உங்கள் நண்பன் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற தெஹிவளையில் அமைந்துள்ள ஒரு கல்லூரியின் கட்டட திறப்பு விழாவில் |
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற தெஹிவளையில் அமைந்துள்ள ஒரு கல்லூரியின் கட்டட திறப்பு விழாவில் |
0 comments:
Post a Comment