உலகக்கோப்பை கால்பந்து தொடரை
பிரேசில் வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
உலகமே
ஆவலோடு எதிர்பார்த்த
20–வது உலக
கோப்பை கால்பந்து
திருவிழா, ‘சம்பா’ நடனத்திற்கு பிரசித்தி பெற்ற
பிரேசில் நாட்டில்
நேற்று கோலாகலமாக
தொடங்கியது.
இந்த
போட்டியில் கலந்து கொள்ளும் 32 அணிகள் 8 பிரிவாக
பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’
பிரிவில் பிரேசில்,
குரோஷியா, மெக்சிகோ,
கேமரூன், ‘பி’
பிரிவில் ஸ்பெயின்,
நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா, ‘சி’ பிரிவில்
கொலம்பியா, கிரீஸ், ஐவரிகோஸ்ட், ஜப்பான், ‘டி’
பிரிவில் உருகுவே,
கோஸ்டாரிகா, இங்கிலாந்து, இத்தாலி, ‘இ’ பிரிவில்
சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ், ‘எப்’
பிரிவில் அர்ஜென்டினா,
போஸ்னியா, ஈரான்,
நைஜீரியா, ‘ஜி’ பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல்,
கானா, அமெரிக்கா,
‘எச்’ பிரிவில்
பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷியா, தென்கொரியா ஆகிய
அணிகளில் இடம்
பெற்றுள்ளன.
ஒவ்வொரு
அணியும் தங்கள்
பிரிவில் உள்ள
மற்ற அணிகளுடன்
தலா ஒரு
முறை மோத
வேண்டும். லீக்
முடிவில் ஒவ்வொரு
பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும்
அணிகள் ‘நாக்–அவுட்’ என்ற
2–வது சுற்றுக்கு
முன்னேறும்
சா
பாலோ நகரில்
உள்ள கொரிந்தியன்
மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில்,
ஏ பிரிவில்
இடம் பெற்றுள்ள
பிரேசில் மற்றும்
குரோஷியா அணிகள்
பலப்பரீட்சை நடத்தியது.. இதில் முதல் லீக்
ஆட்டத்தில் குரோஷியா அணியை 3-1 என்ற கோல்
கணக்கில் பிரேசில்
வீழ்த்தியது. உலகக் கோப்பை கால்பந்து போட்டித்
தொடரை
பிரேசில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நட்சத்திர
வீரர் நெய்மர்
இரண்டு கோல்கள்
அடித்து பிரேசில்
அணியின் வெற்றிக்கு
வித்திட்டார்.
முதல்
பாதி ஆட்டத்தின்
முடிவில் இரு
அணிகளும் தங்களது
விறுவிறுப்பான ஆட்டத்தினால் தலா ஒரு கோல்
அடித்து சமநிலையில்
இருந்தன. இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது கோலைப் பதிவு செய்தது. அணியின் வீரர் நெய்மர் கோல் அடித்தார். பின்னர் கோல் அடிப்பதற்காக குரோஷியாக கடுமையாக போராடியது. ஆனால் அந்த அணிக்கு பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் இறுதியில் பிரேசில் வீரர் ஆஸ்கர் மூன்றாவது கோலை அடித்தார். பிரேசில் அணியின் வெற்றி உறுதியானது. ஆட்ட முடிவில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது. உலகக் கோப்பை தொடரை பிரேசில் வெற்றியுடன் தொடங்கியிருப்பது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment