கண்கவர் நடனங்கள், இசை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக ஆரம்பமான 

உலகக் கோப்பை கால்பந்து போட்டி

உலகமே எதிர்பார்க்கும் 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் வியாழக்கிழமை இரவு கோலாகலமாக தொடங்கியது.
பிரேசில் - குரோஷியா அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் நடைபெற்ற காரின்தியன்ஸ் அரீனா மைதானத்தில் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா தொடங்குவதற்கு முன்பு வரை அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. ஆனால், தொடக்க விழா தொடங்கியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரளாக வந்து, கால்பந்தை ஆராதிக்க தொடங்கி விட்டனர். இருப்பினும் விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு வரை பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன.
மைதானத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட எல்டி பந்து கவனத்தை ஈர்த்தது. அதில் பல்வேறு மொழிகளில் நல்வரவு தெரிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் வித்தியாசமான உடைகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். குறிப்பாக மரங்கள், தாவரங்கள் போல உடை தரித்து நடனமாடியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சில தற்காப்பு.கலைஞர்களும் சாகசம் புரிந்தனர்.
பின்னர்பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ்கிளாடியா லீட்டிபிட் புல் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்தினர்தொடக்க விழாவை உலகம் முழுவதும் இருந்து 300 கோடி பேர் தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

"தி பியூட்டிஃபுல் கேம்என்றழைக்கப்படும் கால்பந்து போட்டியின் 20-வது உலகக் கோப்பை பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் நேற்று வியாழக்கிழமை தொடங்கியதுகாரின்தியன்ஸ் அரீனா மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் இடம்பெற்ற கண்கவர் நடனங்கள்இசை நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top