நகைச்சுவை நடிகர் கொடுக்காப்புளி
செல்வராஜ் மரணம்
நகைச்சுவை
நடிகர் கொடுக்காப்புளி
செல்வராஜ், சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம்
அடைந்தார் என அறிவிக்கப்படுகின்றது. அவருக்கு வயது
58.
கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொங்கி வரும் காவேரி, அண்ணாநகர் முதல் தெரு உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நகைச்சுவை வேடங்களில் நடித்தவர்,
கொடுக்காப்புளி செல்வராஜ். தென்னிந்திய நடிகர் சங்கத்தின்
மூத்த உறுப்பினரான
இவர், துணை
நடிகர் ஏஜெண்டுகளின்
தலைவராகவும் இருந்தார்.
கொடுக்காப்புளி
செல்வராஜின் உடல் தகனம் இன்று (வெள்ளிக்கிழமை)
காலை போரூர் சுடுகாட்டில் நடக்கிறது.
அவருக்கு ராஜகுமாரி
என்ற மனைவி
மட்டும் இருக்கிறார்.
குழந்தைகள் இல்லை.
0 comments:
Post a Comment