இந்தியாவில் பாடசாலைகளில் நொறுக்குத் தீனிகளுக்கு தடை :
குழந்தைகள் நல அமைச்சகம் பரிசீலனை
பாக்கெட்டுகளில்
அடைத்து விற்கப்படும்
நொறுக்கு தீனியை
பாடசாலைகளில் விற்பதற்கு தடைவிதிக்க இந்திய
மத்திய அரசு பரிசீலித்து வருவதாக
அறிவிக்கப்படுகின்றது. மாணவ, மாணவிகளுக்கு நல்ல
சத்தான உணவு
கிடைக்க வழி
செய்யும் வகையில்
இந்திய மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை
அமச்சர் மேனகா
காந்தி இதற்கான
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
பாக்கெடடுகளில்
அடைத்து விற்கப்படும்
நொறுக்குத் தீனிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்
குறித்து சிறுவர்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு வருவதாகவும்,
குழந்தைகள் மற்றும் மகளிர் நல அமைச்சக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பாடசாலை
வளாகங்களில் சத்தான தீனிகள் கிடைக்க
செய்வது குறித்து
இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே வழிகாட்டு
நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதே போன்று பாடசாலை
வளாகங்களில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும்
நொறுக்கு தீனிகள்
மற்றும் குளிர்பானங்களை
தடைசெய்வது குறித்து சட்ட விதிகளை டில்லி
உயர்நீதிமன்றம் ஆராய்ந்து வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment