ஐ.நா மனிதவுரிமைகள்
ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்
பதவிக்காலம் எதிர்வரும்
ஜூலை மாதத்துடன் முடிவு.
ஐ.நா மனிதவுரிமைகள்
ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்
பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில்,
நவநீதம்பிள்ளையின் இடத்திற்கு புதிய
ஐ.நா
மனிதவுரிமைகள் ஆணையாளரை நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை
ஐ.நா
செயலாளர் நாயகம்
பான் கீ
மூன் எடுத்துள்ளார்
என அறிவிக்கப்படுகின்றது
.மேற்காபிரிக்க
நாடான கினியா
பிசாவுவில் ஐ.நாவின் தூதுவராக தற்போது
பணியாற்றும் கிழக்குத் திமோரின் முன்னாள் ஜனாதிபதி
ராமோஸ் ஹோர்தா
புதிய ஐ.நா மனிதவுரிமைகள்
ஆணையாளராக நியமிக்கப்பட
வாய்ப்புள்ளதா? என்று இன்னர் சிற்றி பிரஸ்
எழுப்பிய கேள்விக்கு,
ஐ.நா
தரப்பில் இருந்து
இதுவரை எவ்வித
பதிலும் அளிக்கப்படவில்லை.
அத்துடன்,
இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், சர்வதேச
மனிதவுரிமை செயற்பாட்டாளருமான மார்சுகி
தாருஷ்மன்; மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டவர்களும்
ஐ.நா
மனிதவுரிமைகள் ஆணையாளர் பதவிக்கு போட்டியில் உள்ளதாக
இன்னர் சிற்றி
பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில்,
ஆசிய வலயத்தில்
புதிய ஆணையாளர்
பதவிக்கு பொருத்தமானவர்கள்
தொடர்பிலான பட்டியல் ஒன்று ஐ.நா உயர்மட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக
ஏற்கனவே
தெரியவந்திருந்தது. இப்பதவிக்கு
ஐ.நாவில்
சிறப்பு அறிக்கையாளராக
தற்போது பணி
புரிந்து வரும்
மார்சுகி தாருஷ்மனின்
பெயர் முன்னிலையில்
இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில்
இடம்பெற்ற இறுதிக்கட்டப்
போரின் போது
மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள்
தொடர்பில் தனக்கு
ஆலோசனை வழங்குவதற்காக
ஐ.நா
செயலாளர் நாயகம்
பான் கீ
மூன் நியமித்த
நிபுணர் குழுவின்
தலைவராக இவர்
பணியாற்றியிருந்தார். இதேவேளை,
இவருக்குப் போட்டியாக கிழக்குத் திமோரின் முன்னாள்
ஜனாதிபதி ராமோஸ்
ஹோர்தாவும் இந்தப் பதவிக்கான போட்டியில் முன்னிலையில்
இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment