ராஜ
கழுகின் முதுகில் சவாரி செய்யும் காகம்
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசய
புகைப்படங்கள்
வாஷிங்டனில் கடல் வானில் காகம் ஒன்றை தன் இறக்கையில்
சுமந்தபடி ராஜ கழுகு ஒன்று பறந்து கொண்டிருந்ததை அமெச்சூர் புகைப்பட கலைஞர் பூ
சான் படம் பிடித்து உள்ளார். இது பலரையும் ஆச்சிரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அந்த புகைப்படக்காரர் பூசான் கூறும் போது ஒரு ராஜ கழுகு ஒன்று தனது இரையை தேடி வாஷிங்டன்
கடல் பகுதி மேல் பறந்து கொண்டிருந்தது. இந்த
இரைதேடும் கழுகை படம் பிடிக்க கேமிரா வழியாக பார்த்து கொண்டிருந்த போது
காகம் ஒன்று கழுகின் பின்புறம் பறந்து
வந்தது. நான் முதலில் காகம் கழுகை
முந்தி பறந்து விடும் என தான்
எண்ணினேன்.
ஆனால் அந்த காகம் தரையில் இறங்குவது போல கழுகின் மேல்
பகுதியில் போய் இறங்கியது. ஒரு குறுகிய நேரத்தில் காகம் ஒரு சிறிய இலவச சவாரி
செய்தது பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
இந்த எதிர்பாரத சம்பவத்தால் கழுகிடம் எந்த மாற்றமும் இல்லை. சில வினாடிகளில் இரண்டு பறவைகளும் வெவ்வேறு திசைகளில் பறந்து
சென்றன இந்த புகைப்படத்தை பார்த்து
அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment