ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இப்தார் நிகழ்வ
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று 7ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு-1ல் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மதப் பெரியார்கள், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பொறாமை, கோபம், குரோதம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு நட்புறவூடனும் கூட்டொருமைப்பாட்டுடனும் நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
அனைத்து மத தத்துவங்களின் போதனையூம் அதுவாகுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்து இனங்களுக்கு இடையிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி கூட்டொருமைப்பாட்டுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயலாற்றுகின்ற இலங்கை நாடொன்றை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் இத்தகைய மத வைபவத்தை அனைவரையும் சேர்த்துக்கொண்டு கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment