தமிழ் அரசியல் சமூகத்தின் ஒற்றுமை
எம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமையட்டும்.

-    பைசால் முகம்மது லெவ்வை -காஷ்பி-

நடைபெறப் போகும் பொதுத் தேர்தல் பலரது கவனத்தினையும் ஈர்துள்ளது.. சமூகரீதியாகவும், கட்சி ரீதியாகவும் அரசியல் பிரதிநிதிகள் எவ்வாறு இத்தேர்தலில் முகம் கொடுத்தல் என  சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்...
மகிந்த ராஜபக்ஸ அவர்களின் மீள் வருகைக்கான எற்பாடு கள நிலவரத்தினை உசார் படுத்தியுள்ளதால்  தேர்தல் களம் அனல் பறக்கத்தான்  போகின்றது,
தேர்தலில் சிறுபான்மை இனத்தின் பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்படுவதில் தான் அவர்களுக்கான நன்மை இருக்கின்றது..
தமிழ் சமூகம் அவர்களிடையே பல கட்சிகள் இருந்தபொழுதிலும் 98 வீதம் ஒற்றுமைப்பட்டு தங்களுக்கான பிரதிநிதிகளை திட்டமிடலுடன் பெற்றுக் கொள்கின்றர்.. அதில் அவர்கள் வெற்றியும் பெறத்தான் செய்கின்றனர்.
இந்த நாட்டின் பல பிரதேசங்களிலும் பரந்து வாழும்   முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய  தரணத்தில் இருக்கின்றனர். அதனை இந்த விகிதாசார தேர்தல் முறைமையின் மூலமே பெற முடியும்
விகிதாசார தேர்தல் அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் இருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகம் சார்ந்து சிந்திப்பதில் தவறி இருக்கின்றனர், அல்லது பிரதிநிதிகளை பெறுவதில் கட்சி அரசியல் முனைப்பு    காட்டுவதால் வாக்குகள் பிரிந்து, கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் பறிபட்டுப் போய் இருக்கிறது என்றே கூறலாம்.
1977 ம் ஆண்டிற்குப்பின் புத்தளம் இழந்து நிற்கும் பிரதிநித்துவத்தினைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை,..குருநாகல்.கம்பஹா     மாவட்டங்களில் முஸ்லிம் வாக்குகளை ஒருமுகப்படுத்தி பெறுவதற்கான ஏற்பாடு இன்னும் இல்லை, 2004 ம் ஆண்டிற்குப்பிறகு கழுத்துறை இழந்துள்ள பாராளுமன்ற பிரதிநித்துவம் சிந்திக்கப்படவில்லை..
விகிதாசார தேர்தல் முறைமை முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்ததாக இருக்கும் பொழுது அதன் நன்மைகளை எம் மக்களுக்கு அரசியல் வாதிகள் பெற்றுக்கொடுக்காது கடந்த 25 வருடமாக காலம்  கடத்தி உள்ளனர். .இத் தேர்தல் முறைமையை மாற்றியே தீர்வோம் என்ற கருத்து நிலவும் இக்காலத்தில் தொகுதி முறைமை  மூலம் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநித்துவத்தினை வாழ்நாளில்  கண்டிராத மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்திற்கு விகிதாசார தேர்தல் முறைமை மூலம் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்பம் இருக்கும் போது அரசியல் வாதிகள் முனைப்புக் காட்டுதல் அவசியமாகும்.
அதற்கான இறுதி சந்தர்பமாகவே இத்தேர்தலை பார்க   வேண்டியுள்ளது..
முஸ்லிம் சமூகத்தில்  4 பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கான மாவட்டம் அம்பாறையாகும் . இம்மாவட்டத்தில்  பலர் களம் இறங்க எத்தனிகின்றனர். இவ்வெத்தெனிப்பு தேரத்தல் காலங்களில்  சமூகத்தில் பல பிரச்சினைகள்  கட்டவிழ்துவிட வழிவகுப்பதோடு பிரதிநித்துவம் குறைவதற்கான வாய்பாகவும் மாறிவிடும்.
 பல கட்சிகளாக பிரிந்துள்ள அரசியல்வாதிகள் சமூகத்தின் நன்மை கருதி ஒற்றுமை படமாட்டார்களா?,
 தமிழ் அரசியல் சமூகம் ஒற்றுமையாக இருந்து கொண்டு எத்தனயோ கருமங்களை அவர்களது சமூகத்திற்காக மேற்கொள்கின்றனர் . இவ்வொற்றுமை  எம் அரசியல்     தலைவர்களுக்கு புரியாமலா இருக்கின்றது,,, முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மனக்கண் எப்போது விழிக்கப்போகின்றது?
கண்முன்னே முஸ்லிம் சமூகதிற்கான எதிர்ப்பு  இருக்கும் போது பல கோணங்களாக பிரிந்துள்ளோமே.....  எம் அரசியல் யாருக்காக ? தாங்கள் பாராளுமன்றம் செல்வதற்காகவா? அல்லது சமூகத்தின் உரிமையுடன் கூடிய விடயங்களை கவனிப்பதற்காகவா?
நமது அரசியல்வாதிகள் பதவி ஒன்று நமக்கு கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறி வசைபாடுவதிலும் அவரே சமூகத்தின் தொண்டனாக தன்னை காட்டுவதிலுமே இருக்கின்றனர்... இவர்கள் இச்சமூகத்தினை  பிழையாக வழிநடாத்துகின்றனர்,, அதற்கு முஸ்லிம் சமூகம் பலியாக இருக்கின்றது,,,
தமிழ் கூட்டணி எப்போது பதவிகளுக்கு பின்னால் சென்றது ? அவர்களது பிரதேசங்கள் அபிவிருத்தி அடையவில்லையா ? தொழில் வாய்புகள் அம்மக்களுக்கு கிடைக்கவில்லையா? அவர்களது பாடசாலைகள், வைத்திய சாலைகள் என,,,,  சிறப்பாக அபிவிருத்தி கண்டுள்ளதே ? இத்தனைக்கும் அவர்கள் பதவிகளுடணும் பட் டங்களுடனுமா இருந்தனர்?
சுய இலாபத்திற்காக அரசியல் செய்யாது ஒற்றுமைப் பட்டு  சமூகத்தின் விடிவுக்காகவும் இருப்புக்காகவும் சிந்திப்பதற்கான ஏற்பாடுகளுடன் தமிழ் அரசியல் சமூகத்தின்  ஒற்றுமையினை பாடமாகக் கொண்டு இத்தேர்தலில் களம் காண உரியவர்கள் முனைப்புக் காட்டுவது எம் அரசியல் தலைவர்கள் செய்யும் பெரும் உபகாரமாகவே அமையும்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top