எம்.எஸ். விஸ்வநாதன்கவலைக்கிடமான
நிலையில்
தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிவிப்பு
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ( வயது 87) தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என அறிவிக்கப்படுகின்றது.
அங்கு அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
அவரை மருத்துவமனைக்குச் சென்று இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரையுலகினர் நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை திடீரென மீண்டும் மோசமானது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்திகளை
வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment