புதிய
தூதர்கள் ஜனாதிபதியிடம்
நியமனக் கடிதங்கள் கையளிப்பு.
நியமனக் கடிதங்கள் கையளிப்பு.
இலங்கைக்கு நியமனம் பெற்று வந்துள்ள புதிய தூதர் ஒருவரும்
நான்கு உயர் ஸ்தானிகர்களும் நேற்று 07 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தமது நியமனக் கடிதங்களை ஒப்படைத்தனர்.
ஜப்பானுக்கு ஒரு தூதுவரும் கென்யா, கானா, சிங்கப்பூர், சீசெல் ஆகிய நாடுகளுக்கு உயர்ஸ்தானிகர்களும்
நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பெயர் விபரம் வருமாறு.
திருமதி. புளோரன்ஸ் இமிஸா – விசேட கென்யா உயர்ஸ்தானிகர்.
(H.E. Mrs. Florence lmisa Weche –
High Commissioner of Kenya)
திரு. சாமுவேல் பென்சின் எலி – கானா உயர்ஸ்தானிகர்
(H.E. Mr.Samuel Panyin Yalley –
High Commissioner of Ghana)
திரு. கென்ச் சுகனுமா – ஜப்பான் தூதுவர்
(H.E. Mr.Kenichi Suganuma –
Ambassador of Japan)
திரு. எஸ்.சந்திரதாஸ் – சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர்
(H.E. Mr.S.Chandra Das – High
Commissioner of Singapore)
திரு. பிலிப் லே ஹேல் – சீசெல் உயர்ஸ்தானிகர்
(H.E . Mr. Philippe Le Gall –
High Commissioner of Seychelles)
நியமனக் கடிதங்களை ஒப்படைத்ததன் பின்னர் புதிய
ராஜதந்திரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது தமது நாடுகளுக்கும்
இலங்கைக்குமிடையில் இருக்கின்ற வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கு
புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள அனைத்து தூதர்களும் அர்ப்பணிப்புடன்
செயலாற்றுவார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள்
தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையூடன் இருக்கின்ற சுற்றுலா தொடர்புகளை
மேம்படுத்திக்கொள்வதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இலங்கையூடன் இருக்கின்ற சுற்றுலா தொடர்புகளை
மேம்படுத்திக்கொள்வதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டினார்.
நான் இலங்கையை அழகான பூங்காவாக காண்கின்றேன். பசுமை
மிளிர்கின்ற நமது நாடு உல்லாசப் பயணிகளின் சுவர்க்கமாக இருக்கிறது என ஜனாதிபதி
வெளிநாட்டு தூதர்களுக்கு தெரிவித்ததோடு, அந்நாடுகளுடனான சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பை மேம்படுத்த
வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவூபடுத்தினார்.
0 comments:
Post a Comment