19 தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக

61 சுயேட்சைக் குழுக்கள் கட்டுபணத்தைச் செலுத்துயுள்ளன

திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்புமனுப் பத்திரமும் கையளிப்பு



கஸ்ட் மாதம் 17 ஆம் திகதி  நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று 7ஆம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 4.15 வரை 19 தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக 61 சுயேட்சைக் குழுக்கள் கட்டுபணத்தை வைப்பிலிட்டிருப்பதுடன் 4 தேர்தல் மாவட்டங்களில் கட்சியினாலும் சுயேட்சைக் குழு ஒன்றினாலும் மொத்தமாக 5 வேட்புமனுப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள்  ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 சுயேட்சைக் குழுக்களும், திகாமடுல்ல மாவட்டத்தில் 5 சுயேட்சைக் குழுக்களும், திருக்கோணமலை மாவட்டத்தில் 2 சுயேட்சைக் குழுக்களும் இன்றைய தினம் வரை கட்டுபணத்தை வைப்பிலிட்டிருக்கின்றன.
இதேவேளை, திகாமடுல்ல மாவட்டத்தில் கட்சி ஒன்றினாலும் சுயேட்சைக் குழு ஒன்றினாலும் வேட்புமனுப் பத்திரம் கையளிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம், வன்னி அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கட்சி ஒன்றினால் வேட்புமனுப் பத்திரம் கையளிக்கப்பட்டிருக்கிறது.
வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 13 ஆம்  திகதியுடன்  நிறைவுக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top