HNDA கற்கைநெறியை பட்டப்படிப்பிற்கு
சமப்படுத்த
அமைச்சரவை அங்கீகாரம்
தேசிய
உயர்கல்வி கணக்கியல்
டிப்ளோமா கற்கைநெறியை
பட்டப்படிப்பிற்கு சமப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயர்கல்வி அமைச்சர்
லஷ்மன் கிரியெல்ல
சமர்ப்பித்த குறித்த முன்மொழிவிற்கு, அமைச்சரவை அனுமதி
வழங்கியுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த
கற்கைநெறியை, பட்டப்படிப்பிற்கு சமமற்றதாக்குவதற்கு
அரசு மேற்கொண்ட
நடவடிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், இந்த
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய
உயர்கல்வி கணக்கியல்
டிப்ளோமா கற்கைநெறியை
பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரிக்குமாறு
கோரி கடந்த
ஒக்டோபர் மாதம்
29ஆம் திகதி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு
முன்னாள் மாணவர்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.