தாருஸ்ஸலாம் கட்டிட வருமானம்  தொடர்பாக
அதிஉயர்பீடக் கூட்டத்தில் சமர்பிக்குமாறு
செயலாளரிடம் கடிதமூலம் உயர்பீட உறுப்பினர்கள் கோரிக்கை.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் அதனை அண்டியுள்ள கட்சிக்குச் சொந்தமான நிலம் தொடர்பாக சில விட்டுக்கொடுப்புக்களுடன் சமரசத்திற்கு வந்துள்ள போதிலும் இதுவரை கட்சியின் உயர்பீடத்திற்கு குறித்த கட்டிடத்தினால் கட்சிக்கு கிடைத்த வருமானம்,கிடைக்கவுள்ள வருமானம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி உயர்பீட உறுப்பினர்கள் சிலர் கட்சியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
குறிப்பிட்ட விடயம் தொடர்ந்தும் மூடி மறைக்கப்பட்டு வருவதாகவும் இதில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இம்மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் பேராளர் மகாநாட்டிற்கு முன்பு இடம்பெறவுள்ள கட்டாய அதிஉயர்பீடக் கூட்டத்தில் இதனை சமர்பிக்குமாறும் செயலாளரிடம் கடிதமூலம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பில் உயர்பீட உறுப்பினர்களால் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசகர்களின் பார்வைக்காக பதிவிடுகின்றோம்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top