குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் முஹம்மது அலியின்
ஜனாஸாதொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று
கண்ணீர் அஞ்சலி
குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழந்த முஹம்மது அலியின் இறுதிச் சடங்கானஜனாஸாதொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 
'தி கிரேட்டஸ்ட்' என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி (74) சுவாசம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் கடந்தவாரம் காலமானார்.
காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முஹம்மது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட முஹம்மது அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்தே தோல்விகளையும் கண்டவர் என்ற தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரரும் ஆவார்.
கடந்த முப்பது ஆண்டுகளாகபார்கின்சன் டிஸீஸ்எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறு நீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முஹம்மது அலி, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள போயினிக்ஸ் நகரில் வசித்து வந்தார்.
சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் முஹம்மது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த நான்காம் திகதி  அவர் காலாமானார்.
மூன்றுமுறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முஹம்மது அலியின் உடல் கடந்த ஆறாம் திகதி அரிசோனா நகரில் இருந்து கென்ட்டுக்கி மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகருக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
சந்தூக்கு பெட்டியின் மீது தங்கநிற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற போர்வையால் மூடப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட முஹம்மது அலியின் உடலுக்கு கடந்த மூன்று நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.






.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top