அமைச்சர்களுக்கான சொகுசு வாகனங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு
இரத்து செய்த
பிரதமர்
நாட்டில்
அண்மையில் ஏற்பட்ட
அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வசதிகளையும்
இழப்பீடுகளையும் வழங்க நிதியை ஒதுக்கும் வரை,
அமைச்சர்களுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள சொகுசு வாகனங்களுக்கான
நிதி ஒதுக்கீட்டை
நிறுத்தி வைக்குமாறு
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள்
பலருக்கு சொகுசு
வாகனங்களை இறக்குமதி
செய்வதற்காக 118 கோடி ரூபாவை கோரி அண்மையில்
நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீட்டுச் சட்டமூலம் ஒன்று
சமர்பிக்கப்பட்டது.
இந்த
நிலையில், பிரதமரின்
உத்தரவுக்கு அமைய அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கப்படும்
வரை, அமைச்சர்களுக்கான
வாகன இறக்குமதி
தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment