அமெரிக்காவில்
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:
120 பேர் படுகாயம்
அமெரிக்காவின்
கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில்
120 பேர் படு
காயம் அடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள்
செய்திகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின்
வடக்கு கலிபோர்னியாவில்
இன்று அதிகாலை
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில்
6.0 ஆக பதிவாகியுள்ளது
என்று அமெரிக்கா
புவியியல் ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளில் இருந்த மக்கள்
அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். கட்டடங்கள்
பலமாக குலுங்கின.
நிலநடுக்கத்தினால் அதிக கட்டிடங்கள்
சேதம் அடைந்துள்ளன.
உடனடியாக பொதுமக்கள்
பொலிஸாருக்கு அழைப்பு விடுத்தனர். விரைந்து வந்த
மீட்பு குழுவினர்
கட்டங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில்
120 பேர் படு காயம் அடைந்துள்ளார்.
காயம்
அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்
சிலரது நிலை
மிகவும் கவலைக்கிடமாக
உள்ளது என்று
தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சில
இடங்களில் தீ
விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்
ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தீ விபத்தில்
சிக்கிய கட்டடங்கள்,
வாகனங்கள் குறித்தும்
அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எரிவாயு
குழாய்களும் சேதம் அடைந்துள்ளன. அங்கு தொடந்து
மீட்பு பணிகள்
நடைபெற்று வருகிறது
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.