எமக்குத் தேவையானது ஹமாஸ் இயக்கத்திற்கு நடந்ததா?
ISIS செய்துகொண்டிருப்பதா...??

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் )

ஈராக்கில் சுன்னி, சீயா, குர்திஸ் இன முஸ்லிம் மதப் பிரிவுகள் காணப்படுகின்றன.ஈராக்கினுள் அமெரிக்க யுத்தப்பிரகடனம் செய்வதற்கு முன்பு ஈராக்கில் அமெரிக்காவின் கால் பதிவிற்கு குர்திஸ் மதப்பிரிவுவுகள் அதிகம் உதவி, சுன்னி இன மதப்பிரிவின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டிருந்தது.பிற்பட்ட காலப்பகுதியில் ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் ஹுஸைன் குர்திஸ் மதப்பிரிவின் மீது சில வன்முறைகளை தொடுத்தார் எனக் கூறி மென்மேலும் குர்திஸ்,சுன்னி மதப்பிரிவுகளுக்கிடையில் விரிசல் அதிகமாகிக்கொண்டே சென்ற போதிலும்,இதன் போது அமெரிக்கா தனக்கு உதவாத காரணத்தால் அமெரிக்க அரசின் மீது குர்திஸ் இன மக்கள் நம்பிக்கை இழந்தனர்.
அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்து வெளியேறியதன் பின்னர் பிரச்சினைகள் படிப்படியாக குறைவடைந்து கொண்டு சென்ற போது இசிஸ் அமைப்பின் நேரடி சீயா,குர்திஸ் மதப்பிரிவு மோதலானது தற்பொழுது மீண்டும் இனப்பிரிவுகளுக்கிடையிலான விரிசலை அதிகமாக்கி கொண்டிருக்கிறது.
இசிஸ் அமைப்பின் இவ் ஈராக்கிய செயற்பாட்டால் உலக முஸ்லிம் நாடுகளே!பல கூறுகளாக பிரிவு படும் நிலையில் உள்ளது.
யுத்தத்தின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவுமில்லை,பரப்பப்பட வேண்டிய அவசியமும் இல்லை.என்பதை முஸ்லிம்களாகிய நாம் முதலில் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். ஈராக்கின் சில பகுதிகளில் இசிஸ் அமைப்பினால் அரங்கேறுவது என்ன??

எனினும்,தற்போது காசாவில் நடப்பது,நடந்தது என்ன..??
காஸா வாழ் முஸ்லிம்களிற்காக வரலாற்றில் என்றுமில்லாதது போன்று சுன்னி அரசு தலைமையிலான கட்டார் அரசு,சீயா தலைமையிலான ஈரான் அரசு,குர்திஸ் தலைமையிலான துருக்கி அரசு போன்ற பல்வேறான நாடுகள் மதப்பிரிவினை வாதம் அனைத்தையும் தூக்கி எறிந்து மதப்பிரிவினை வாதத்திற்குஅப்பால் நேரடிமறைமுக உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன,செய்தன.வெற்றியும் என்றுமில்லாதது போன்று அபரிதமாகவே அடைந்தும் உள்ளோமல்லவா..??
காஸாவிற்கு யாவரும் ஒன்றிணைந்து உதவியது போன்ற இஸ்லாமிய பலமிக்க ஒன்றிணைந்த அரசு தோற்றுவிக்கப்படுவதானதே முஸ்லிம்களின் விடிவிற்கு வழிசமைக்கும்.அவ்வாறான ஒன்றிணைந்த அரசு பலஸ்தீனத்தை மையப்படுத்தி உருவாகவே அதீதம் வாய்ப்பு உள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top