சிரியா உள்நாட்டுப்
போரில் இதுவரை 2 இலட்சம் பேர் பலியானதாக
ஐ.நா.
மனித உரிமை ஆணையம் தகவல்
2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிரியாவின் உள்நாட்டு
போரில் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 91 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாக ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிரியாவில்
அதிபர் பஷார்
அல்-அசாத்துக்கு
எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும்
மேலாக சிரியாவில்
உள்நாட்டு போர்
நடந்து வருகிறது.கடந்த 2011ம்
ஆண்டு மார்ச்
மாதம் உள்நாட்டுப்
போர் தொடங்கியது.
இந்த
போர் தற்போது
வரை நீடித்து
வருகிறது. இந்நிலையில்
2014ம் ஆண்டு
ஏப்ரல் மாதம்
வரை சிரியாவின்
உள்நாட்டு போரில்
பலியானோர் எண்ணிக்கை
1 லட்சத்து 91 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாக ஐக்கிய நாடுகள்
சபையின் மனித
உரிமைகள் ஆணையாளர்
நவி பிள்ளை
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
நேற்று அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தலைநகர் டமாஸ்கஸை உள்ளடக்கிய
மாகாணத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர்
இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
மனித
உரிமைகள் ஆணையம்
வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள், நான்கு கண்காணிப்பு அமைப்புகளிடம் இருந்து
பெறப்பட்ட தகவல்களின்
அடிப்படையிலானது. இது குறைந்த மதிப்பீடாக இருக்கலாம்
உண்மையான எண்ணிக்கை
இதைவிட அதிகமாக
இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment