ஐஸ் பக்கெட் சவால் குளியல்
ஸ்காட்லாந்தை
சேர்ந்த வாலிபர் பலி
உலகம்
முழுவதும் தற்போது
ஐஸ் பக்கட்
சவால் குறித்து
பெரும் பரபரப்புடன்
பேசப்பட்டு வருகிறது. ஏ எல்.எஸ்
என்ற அமைப்புக்கு
நிதி திரட்டுவதற்காக
ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐஸ் பக்கெட் சவால்
குளியல் தற்போது
உலகம் முழுவதிலும்
உள்ள வி.ஐ.பிக்களை
பிடித்து ஆட்டுவித்து
வருகிறது. இதுவரை
அமெரிக்காவில் இருந்து மட்டும் 9.4மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டு இருப்பதாகவும்
இந்த தொகை
இன்னும் நாளுக்கு
நாள் அதிகரித்துக்கொண்டே
இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏ.எல்.எஸ்.
என்னும் நோயை
பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்கும். இதில் பங்கேற்பவர்
ஒரு பக்கெட்டில்
ஐஸ் வாட்டரை
எடுத்துக் கொண்டு
அதனை அவர்
மீது ஊற்றி
கொள்ள வேண்டும்.அதன் பின்பு
அவருக்கு தெரிந்த
மூன்று பேரை
கைக்காட்ட வேண்டும்.
அவர்கள் அடுத்த
24 மணி நேரத்தில்
இது போல
செய்ய வேண்டும்.
இதனை செய்ய
தவறுபவர்கள் ஏ.எல்.எஸ். அமைப்புக்கு
100 டாலர் உதவியாக
வழங்க வேண்டும்.
இதன் மூலம்
இந்த நோயை
பற்றி உலகம்
முழுவதும் உள்ள
அனைத்து மக்களும்
தெரிந்து கொள்வார்கள்
என்பது இதன்
நோக்கம்.
இந்த
ஐஸ் பக்கட்
குளியலை உலகப்புகழ்
பெற்ற கால்பந்து
வீரர்கள் மற்றும்
டென்னிஸ் வீரரகளும்
பபகேற்று குளித்து
உள்ளனர்
அது மட்டுமின்றி தற்போது இந்திய திரையுலக
நட்சத்திரங்களையும் இந்த ஐஸ்
பக்கெட் குளியல்
ஆட்டுவித்து வருகிறது.
தமிழ்
நடிகை ஹன்சிகா,
மற்றும் பிபாஷா
பாசு, அபிஷேக்
பச்சன், ரித்தீஷ்
தேஷ்முக், சானியா
மிர்சா ஆகியோர்களும்
இந்த குளியலை
செய்துள்ளனர்.
இந்த
ஐஸ் பக்கெட்
சவால் குளியல்
ஆபத்து நிறைந்ததும்
கூட இந்த
குளியலில் ஈடுபட்டு
ஏற்கனவே உயிர்
இழந்து உள்ளார்.
நியூசிலாந்தை சேர்ந்த 40 வயது வில்லியம்ஸ்
தெப்பானியா என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர்
இழந்தார். இந்த
நிலையில் தற்போது
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு வாலிபரும் உயிர்
இழந்து உள்ளார்
என தகவல்
வெளியாகி உள்ளது.
ஸ்காட்லாந்தை
சேர்ந்த கேமரூன்லான்காஸ்டர்
( வயது 18) என்ற வாலிபர் ஐஸ் பக்கெட்
சவால் குளியலில்
ஈடுபட்ட போது
உயிர் இழந்தார்.இது குறித்து
விசாரணை நடைபெற்று
வருவதாக ஸ்காட்லாந்து
பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.
0 comments:
Post a Comment