தமிழர்களுக்கு
நீதி கிடைப்பதற்கு
இலங்கை அரசு
உத்தரவாதம் அளிக்க வேண்டும்:
இந்திய பிரதமர்
மோடி வலியுறுத்தல்
இலங்கையில்
வாழும் தமிழர்களுக்கு
சம உரிமை,
நீதி, கெளரவம்,
சுயமரியாதை ஆகியவத்திற்கு இலங்கை அரசு முழு
உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர்
நரேந்திர மோடி
இலங்கை அரசை
வலியுறுத்தியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின்
முதன்மை தமிழ்
அரசியல் கட்சியான
தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் 5 நபர் குழுவிடம் மோடி இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
“ஒருங்கிணைந்த இலங்கை சட்டாக்கத்திற்குள் தமிழர்களுக்கு
சம உரிமை, நீதி, கெளரவம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்கு இலங்கை அரசு உத்திரவாதம் அளிக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்” என்று அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்,
“இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கூட்டுறவு உணர்வு மற்றும் பரஸ்பர ஏற்புடைமை ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்”
என்று அதே
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவையெல்லாம்
அரசியல் சாசனம்
13ஆம் சட்டத்திருத்ததின்படி
நடக்க வேண்டும்
என்று மோடி
வலியுறுத்தியது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
13ஆம்
சட்டத்திருத்தம் என்பது தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை
அளிப்பதாகும்.
போரினால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள்,
மறுவாழ்வு, மற்றும் மறுகட்டுமானப் பணிகள் ஆகியவற்றில்
இந்தியா கவனம்
செலுத்தும் என்று மோடி உறுதியளித்துள்ளதாக தமிழர் தேசியக் கூட்டணிக் கட்சியினர்
தெரிவித்துள்ளனர்.
தமிழர்
தேசியக் கூட்டணியின்
இந்தக் குழுவிற்கு
தமிழ் அரசியல்
தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமை
வகித்தார். இவர் நேற்று வெளியுறவுச் செயலர்
சுஷ்மா சுவராஜைச்
சந்த்தித்து இலங்கையில் தற்போது தமிழர்களின் நிலை
பற்றி விளக்கியுள்ளார்.
இன்றைய
சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியின்
முதன்மைச் செயலர்,
நிருபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவல்,
வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர்
இருந்தனர்.
0 comments:
Post a Comment