உலகில் சுத்தமான
ஹொட்டல்கள் கொண்ட நகரம்
தர வரிசை பட்டியலில்
டோக்கியோவுக்கு முதலிடம்
ஒரு நாட்டில் இருந்து வேறு நாட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு
தங்களுக்கு தேவையான வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகளை எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில் ஆடம்பர ரக ஹொட்டல்களை பெரும்பான்மையான சுற்றுலாவாசிகள் தேர்வு செய்வார்கள்.
அதற்கேற்ப ஹொட்டல்களும் தரமானதாக இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கருதுவர். இந்நிலையில், சுற்றுலா செல்பவர்களை வரவேற்று உபசரிப்பதில் தனி
கவனம் செலுத்தும் வகையில் சுத்தமான அறைகள் கொண்ட
ஹொட்டல்களை குறித்து பயண
இணையதளம் ஒன்று ஆய்வு
நடத்தியது.
அதில், சில
நகரங்களில் எளிதாக சுத்தமான ஹொட்டல்களை தேர்வு செய்ய
முடியும் என்று ஆய்வு
முடிவு தெரிவித்துள்ளது. இதில்,
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நாட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் நல்ல தரமிக்க ஹொட்டல்களை எளிதில் தேர்வு செய்ய
முடியும் என தெரிய வந்துள்ளது. இணையதள ஆய்வின்படி, சுத்தமான ஹொட்டல்கள் பிரிவில், டோக்கியோ நகரமானது 10க்கு 8.93 புள்ளிகளை சராசரியாக பெற்றுள்ளது.
அடுத்த இடத்தில் போலந்து நாட்டின் வார்சா நகரம் இடம் பிடிக்கிறது. இது 8.76 புள்ளிகளை சராசரியாக பெற்று தென்
கொரியாவின் தலைநகர் சியோல் நகருக்கு சற்று முந்திய இடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து, ஸ்லொவேக்கியா நாட்டின் தலைநகர் பிரட்டிஸ்லேவியா நகரம்,
8.54 புள்ளிகளை சராசரியாக பெற்று பல்கேரியா நாட்டின் தலைநகர் சோபியா நகருக்கு இணையாக உள்ளது.
இந்த தர வரிசை பட்டியலில், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரம் 10க்கு
7.29 புள்ளிகளை பெற்று கடைசி
இடத்தில் உள்ளது.
இந்த தர வரிசை பட்டியலுக்கு அடிப்படை விசயமாக அமைந்தது மேற்கத்திய ஐரோப்பிய ஹொட்டல்களின் சுகாதாரம். இந்த பட்டியலில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரம் (7.52 புள்ளிகள்), நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரம் (7.53 புள்ளிகள்), தி நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரம் (7.58 புள்ளிகள்) மற்றும் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரம் (7.60 புள்ளிகள்) மிக
மோசமான புள்ளிகளை பெற்றுள்ளது. உலகில் அதிக
சுற்றுலா பயணிகள் கூடும் இடமாக விளங்கும் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ள ஹொட்டல்கள் சுகாதாரம் என்ற வகையில் பின்தங்கியே உள்ளன.
தர வரிசை பட்டியலில் 7.63 புள்ளிகளையே அது பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment