சார்ஜ் ஏறி கொண்டிருந்த  ஐ-போனை
அருகில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்

படுக்கையில் சார்ஜ் ஏறி கொண்டு இருந்த செல்போன் மீது தெரியாமால் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது போன் கடும் வெப்பம் அடைந்துள்ளது. இதனால் அவரது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு உயிர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் டியோனே பாக்ஸ்டர்(வயது 24) என்பவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
டியோனே பாக்ஸ்டர் -போன் பிரியர் ஆவார். எப்போதும் -போனை தன்னுடன் வைத்துக் கொள்வார். சம்பவத்தன்று இரவு தனது -போனை சார்ஜ் ஏற்றியுள்ளார். படுக்கையில் சார்ஜ் ஏறி கொண்டு இருந்த செல்போன் மீது தெரியாமால் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது போன் கடும் வெப்பம் அடைந்துள்ளது. இதனால் அவரது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு உயிர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. காயம்  அடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில் "நான் தூங்கியபோது போனில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக எனது மார்பகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நான் என்னுடையை போனை தூக்கியபோது அது மிகவும் வெப்பமாக இருந்தது. என்னால் அதனை தொடக் கூட முடியவில்லை." என்று கூறியுள்ளார். அதிகமாக வெப்பம் ஆகும் -போனால் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக -போனை வைத்து தூங்கிய  18 வயது ஜாக் பார்கெர் என்ற வாலிபர் கையில் காயம் ஏற்பட்டது. பெப்ரவரியில் பாடசாலை மாணவியின் பாக்கெட்டில் இருந்த -போன் எரிந்ததில் அவர் காயம் அடைந்தார். 14 வயது சிறுமி வைத்திருந்த -போன் எரிந்ததில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது -போன் வெப்பத்தால் காயம் அடைந்த பெண் தனது இரண்டாவது குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாது என்று மிகவும் அச்சத்தில் உள்ளார்.

சார்ஜ் ஏறும்போது அதில் பேச வேண்டாம், கேம் விளையாட வேண்டாம் என்று பல்வேறு விழிப்புணர்வு கொண்டுவரப்பட்டாலும், அதனை மீறுபவர்கள் உள்ளனர். யாரும் தூங்கும் போது தங்கள் அருகே செல்போன் வைக்க வேண்டாம். குழந்தைகள் கைகளில் கொடுப்பதும் தவறு. இதுபோன்ற தவறுகளால் பொதுமக்கள் பரவலாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top