அமெரிக்க செய்தியாளர் படுகொலை விடியோ போலியானது?

நிபுணர்கள் சந்தேகம்

அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபோலியின் தலையைத் துண்டிப்பதைப் போன்று இணையதளத்தில் .எஸ். போராளிகள் வெளியிட்ட விடியோ போலியானதாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரை ஏற்கெனவே கொலை செய்துவிட்டு, கமரா முன்பு தலையைத் துண்டித்ததைப் போல நாடகமாடியிருக்கலாம் என அவர்கள் சந்தேகின்றனர்.
பிரிட்டனில் காவல் துறையினருக்காகப் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சர்வதேச தடயவியல் நிபுணர் குழு, இந்த விடியோ குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அந்த ஆய்வுக்குப் பின் அந்நிபுணர் குழு கூறியிருப்பதாவது:
அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபோலி படுகொலை செய்யப்பட்டார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
எனினும், அவரது தலையைத் துண்டிப்பது போல் வெளியான காட்சி போலியானது என சந்தேகிக்கிறோம்.
போராளிகள் எழுதிக் கொடுத்ததை ஜேம்ஸ் ஃபோலி படித்துக் கொண்டிருக்கும்போதே சில இடங்களில் கமரா நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் இயக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அது போல, கமரா நிறுத்திய பிறகே அவரை கொலை செய்துவிட்டு, பிறகு கமரா முன்பு அவரது கழுத்தை அறுப்பது போல நாடகமாடப்பட்டதாகத் தெரிகிறது. காரணம், கத்தியால் அவரது கழுத்தை ஆறு முறை அறுப்பதாகக் காட்டப்பட்டபோதும், துளியும் இரத்தம் தென்படவில்லை.
மேலும், ஃபோலியின் கழுத்தில் வெட்டு விழுவதைப் பார்க்க முடியாமல், விடியோவில் இடம் பெற்றுள்ள போராளியின் கை அந்த இடத்தை மறைத்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top