ஐ.எஸ்.ஐ.எஸ்.
போராளிகளின் செயல்பாடுகள்
இஸ்லாம்
மதச் சட்டத்துக்கு எதிரானது
- மலேசிய பிரதமர்
நஜீப் ரசாக்
ஐ.எஸ்.ஐ.எஸ்.
போராளிகளின் செயல்பாடு இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது என மலேசிய பிரதமர் நஜீப்
ரசாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ஐ.எஸ்.ஐ.எஸ்.
நடவடிக்கைகள், இறைதூதர் முகம்மது நபியின் படிப்பினைகளுக்கு எதிராக இருக்கின்றன. இது
இஸ்லாம் மதச்சட்டத்துக்கு எதிரானது. சிரியாவிலும், ஈராக்கிலும் அவர்கள் நடந்து கொள்ளும்
விதம் எங்கள் மத நம்பிக்கை, கலாச்சாரம், அடிப்படை மனிதநேயத்திற்கு எதிராக அமைந்துள்ளன"
என்று அவர் கூறியுள்ளார்.
மலேசியப்
பெண்கள் மூன்று பேர், ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் பாலியல் தேவைக்காக தங்களை அப்படையுடன்
இணைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச்
செய்தியின் பின்னணியிலேயே, மலேசிய பிரதமர் நஜீப், ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளை கடுமையாக சாடியுள்ளார்.
அல்காய்தா
அமைப்பின் இருந்து பிரிந்து ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற போராட்டப்படை உருவாக்கப்பட்டது. இந்த
அமைப்பானது, ஈராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன. சன்னி முஸ்லிம்கள்
தலைமையிலான ஆட்சியை அமைக்க இவர்கள் முயன்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment