இலங்கையில் இந்த வருடத்திற்கான
பத்தாவது லட்சமாக வந்த பிரிட்டன் தம்பதியினர்
இந்த வருடத்திற்கான பத்தாவது லட்சம் உல்லாச பயணிகள் நேற்று
நண்பகல் 12.45 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். பத்தாவது லட்சம் உல்லாச பயணியாக இலங்கை வந்தவர்,
பிரித்தானிய பிரஜையான ஜோசுவா க்ளட்ஸடயின் சோபி நாதன் (Mr. Joshua Gladstein and
Ms. Sophie Nathan) ஆகிய தம்பதிகளாவர். இவர்கள்
தமது முதலாவது திருமண நாளை கொண்டாவதற்காகவே இலங்கை வந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி
செயலக முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உட்பட மற்றும் அதிகாரிகள் இந்த உல்லாசப்
பயண தம்பதிகளை வரவேற்றனர். இந்த ஆண்டுக்கான
பத்தாவது லட்சம் உல்லாச பயணிகளாக தாம் திகழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதாக அந்த தம்பதியினர்
தெரிவித்தனர். இவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.