இஸ்ரேல் உளவாளிகளாக
செயல்பட்ட
18 பாலஸ்தீனர்கள்
சுடப்பட்டனர்
இஸ்ரேல்
உளவாளிகளாக செயல்பட்ட 18 பாலஸ்தீனர்களை
ஹமாஸ் போராளிகள்
சுட்டுக் கொன்றனர்.
காஸா
முனையில் இருந்து
கொண்டு, இஸ்ரேலுடன்
சதி செய்து,
உளவாளிகளாக செயல்பட்டு வந்ததாக 7 பாலஸ்தீனர்கள் மீது
ஹமாஸ் போராளிகளுக்கு
சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து மத்திய காஸா சதுக்கத்தில், மசூதி
ஒன்றில் முஸ்லிம்கள்
தொழுகை முடித்துக்கொண்டு
வெளியே வந்தபோது,
அவர்கள் முன்னிலையில்,
அந்த உளவாளிகளை
தலைகளை துணியால்
மூடி மறைத்து,
கைகளை கட்டி,
போராளிகள் சுட்டுக்கொன்றனர்.
இதேபோன்று, காஸா பகுதியில் ஒரு பொலிஸ்
நிலையத்தில் வைத்து 11 பாலஸ்தீனர்களை அவர்கள் இஸ்ரேல்
உளவாளிகளாக செயல்பட்டு வந்ததாகக் கருதி, ஹமாஸ்
இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஒரே நாளில்
18 உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, காஸாமுனையில்
பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
காஸா
நகரில் ஹமாஸ்
போராட்ட இயக்க தலைவர்கள் வீடுகளின் மீது இஸ்ரேல்
ராக்கெட் குண்டுகளை
வீசியதை அடுத்து
உளவாளிகளாக செயல்பட்டவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்தில்
இருந்து இரு
தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில்
2,087 பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டு
உள்ளனர் என்று
பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் இயக்கத்தினரும், இஸ்ரேல் இராணுவமும்
ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.
0 comments:
Post a Comment