இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த தயார்
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் தெரிவிப்பு
வடக்கு
மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்
பேச்சு வார்த்தை நடத்த தயார் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்
தேசிய கூட்டமைப்பைச்
சேர்ந்த எம்.பி.க்கள்
இந்தியா சென்று
டில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா
சுவராஜ், முன்னாள்
பிரதமர் மன்மோகன்சிங்
ஆகியோரை சந்தித்துப்
பேசினார்கள்.
மோடியை
சந்தித்த போது இலங்கை
வடக்கு மாகாண
முதல்–அமைச்சர்
விக்னேஸ்வரன் கொடுத்தனுப்பிய மனுவையும் தமிழ் எம்.பி.க்கள்
பிரதமர் மோடியிடம்
ஒப்படைத்தனர். அதை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி
தமிழ் எம்.பி.க்கள்
மூலம்
விக்னேஸ்வரனை டில்லிக்கு வருமாறு
அழைப்பு விடுத்தார்.
இந்த
நிலையில், இந்தியப்
பிரதமர் நரேந்திர
மோடியுடன் பேச்சு
வார்த்தை நடத்த
தயார் என்றும்
வடக்கு மாகாண
சபை மற்றும்
தற்போதைய அரசியல்
சூழ்நிலை குறித்து
பேச்சு வார்த்தை
நடத்த விரும்புவதாக
விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய
பிரதமரின் முறைப்படியான
அழைப்பு கிடைத்தவுடன்
தாம் உடனடியாக
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும்
விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment