நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர்
கட்சிப் போராளிகளின்
மனங்களை வென்றவர்
நீதி
அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர்
நேர்மையானவர், உதவி செய்யக்கூடியவர், போராளிகளை மதிக்கத்
தெரிந்தவர் என்பது நமது காதுகளில் ஒலிக்கின்ற
வசனங்கள்.ஆனால்
இன்று ஒரு
இணையத்தளத்தின் செய்தியைப் பார்த்தபோது கட்சிப் போராளிகள்
மிகக் கவலையடைந்துள்ளதாகக்
கூறப்படுகின்றது..
தனிப்பட்ட
ஏதோ ஒரு
நிகழ்ச்சி நிரலை
வைத்துக்கொண்டு ரஹ்மத் மன்சூர் கட்சிப்போராளிகளை புறக்கணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை நற்பிட்டிமுனையைச்
சேர்ந்த ஒரு
சிலர் கட்சியின்
தலைவரும் நீதி
அமைச்சருமான ஹக்கீமிடம் முன்வைத்துள்ளதாக
அறிகின்றோம்.
அம்பாரை
மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு போராளியினதும் மனங்களை வெற்றி
கொண்டவர்தான் ரஹ்மத் மன்சூர் ஆகும். அப்படிப்பட்ட
ஒருவரை தனிப்பட்ட
சில காரணங்களுக்காக
பிழையாக போட்டுக்கொடுத்திருப்பது
என்பது கவலைக்குரியதாகும்.
ரஹ்மத்
மன்சூர் நீதி
அமைச்சில் இணைப்புச்
செயலாளராக பொறுப்பெடுத்ததன்
பின்னர்தான் அம்பாரை மாவட்ட கட்சிப் போராளிகளுக்கும்,
அரசியல் அந்தஸ்துள்ளவர்களுக்கும்
அமைச்சில் வேலைகள்
ஒழுங்காக நடக்கின்றது
என்பது வெளிப்படை.
அவ்வாறான
நிலையில் அமைச்சர்
ஹக்கீமிடம் ஏதோ கொள்ளையடித்துவிட்டார் என்பது போல்
முறைப்பாடு என்பது சிறுபிள்ளைத்தனமானதும்
கண்டிக்கத்தக்கதுமாகும்.மத்திய குழு
என்ற போர்வையில்
பொய்யான அறிக்கையையும்
வெளியிட்டுள்ளனர். மத்திய குழுவிற்கு
இது விடயத்தில்
எதுவும் தெரியாது
என்று கூறப்படுகின்றது.
மத்திய குழுவின்
தலைவர் இந்த
அறிக்கையை நிராகரித்ததுடன்
மத்திய குழு
இப்படியான சந்திப்புக்களை
மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
நன்றி:
0 comments:
Post a Comment