ஊவா மாகாண
சபைத் தேர்தல் பசறை கூட்டம்
சஜித்திற்கு அழைப்பு
விடுத்திருக்கும் ரணில்
பதுளை,
பசறை நகரில்
அடுத்த மாதம்
6 ஆம் திகதி
நடைபெறும் ஐக்கிய
தேசியக் கட்சியின்
பிரசாரக் கூட்டத்தில்
இணைந்து கொள்ளுமாறு
அந்த கட்சியின்
தலைவர் ரணில்
விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்.
அன்றைய
தினம் சஜித்
பிரேமதாசவை கட்சியின் பிரதித் தலைவராக அறிவிக்க
ரணில் விக்ரமசிங்க
திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய
தேசியக் கட்சியின்
பிரதித் தலைவர்
பதவியை சஜித்
பிரேமதாசவுக்கு வழங்கினால், ஊவா மாகாண சபைத்
தேர்தல் மட்டுமல்லாது
ஏனைய தேசிய
தேர்தல்களிலும் கட்சியின் வெற்றிக்கு பாரிய பலமாக
அமையும் என
அந்த கட்சியை
சேர்ந்த கரு
ஜயசூரிய உட்பட
பல தலைவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரணில்
மற்றும் சஜித்
பிரேமதாச ஆகியோர்
ஒரே மேடைக்கு
வருவதாக வழங்கிய
உறுதிமொழியின் அடிப்படையிலேயே தனது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியை ராஜினாமா
செய்து விட்டு
ஹரின் பெர்ணான்டோ
ஊவா மாகாண
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
எவ்வாறாயினும்
பிரதித் தலைவர்
பதவியை ஊவா
மாகாண சபைத்
தேர்தலுக்கு முன்னர் ஏற்றுக்கொள்வது தொடர்பில் சஜித்
பிரேமதாச இரட்டை
நிலைப்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அரசியல்
ரீதியாக தன்னை
அழிக்க ரணில்
விக்ரமசிங்க வைத்துள்ள பொறியாக இது இருக்கலாம்
என சஜித்
எண்ணுவதாக சஜித்
தரப்பின் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment